- Home
- Tamil Nadu News
- 'சமாதானத்துக்குலாம் வேலையே இல்ல' நான் சொன்னா சொன்னது தான்! சிறப்பு பொதுக்குழு உறுதி - ராமதாஸ் அதிரடி
'சமாதானத்துக்குலாம் வேலையே இல்ல' நான் சொன்னா சொன்னது தான்! சிறப்பு பொதுக்குழு உறுதி - ராமதாஸ் அதிரடி
பாமக சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக.வில் அதிகார மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் புதிய வீரியம் பெற்று வருகிறது. பாமக தலைவரான அன்புமணி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணியின் தலைவர் பதவி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி ராமதாஸ் அனைவரையும் அதிரவிட்டார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அன்புமணி
மேலும் பாமக.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக் கிழமை இரவு ராமதாஸ்ன் மனைவியும், அன்புமணியின் தயாருமான சரஸ்வதியின் பிறந்த நாள் விழா தைலாபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அன்புமணியும், ராமதாஸ்ம் அருகருகே நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தந்தை, மகன் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்ததாக பாமக.வினர் தெரிவித்து வந்தனர். மேலும் மோதல் முடிவுக்கு வந்ததால் ராமதாஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று சொல்லப்பட்டது.
சிறப்பு பொதுக்குழு கூட்டம்
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுக்குழு ரத்து என்பது வதந்தி
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக் கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.