MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்புமணிக்கு லாஸ்ட் சான்ஸ்.! ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு

அன்புமணிக்கு லாஸ்ட் சான்ஸ்.! ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி விவகாரம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. அன்புமணி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விளக்கம் அளிக்க கடைசி வாய்ப்பு 

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 03 2025, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராமதாஸ் அன்புமணி மோதல்
Image Credit : facebook / ramadoss

ராமதாஸ் அன்புமணி மோதல்

பாமக நிறுவனர் சு. ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மோதல் தற்போது உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணித் தலைவராக அறிவித்தார். 

இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து, "எனக்கு உதவியா? கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆகிவிட்டது" என்று குறுக்கிட்டார். இதற்கு  ராமதாஸ் "இது என் கட்சி, நான் சொல்வதை கேட்க வேண்டும்; இல்லையென்றால் வெளியேறுங்கள்" என்று பதிலளித்தார்.

25
பாமக போட்டி பொதுக்குழு கூட்டம்
Image Credit : facebook / ramadoss

பாமக போட்டி பொதுக்குழு கூட்டம்

அடுத்த சில மாதங்களிலேயே மீண்டு மோதல் ஏற்பட்டது. ராமதாஸ் தன்னை கட்சித் தலைவராக அறிவித்து, அன்புமணியை "செயல் தலைவர்" என்று அறிவித்தார்.இது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டு, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை சுட்டிக்காட்டினார். அடுத்தாக மே 16ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அழைத்த கூட்டத்தை அன்புமணி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். 

இதனை தொடர்ந்து ஆவேசம் அடைந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அன்புமணியை அமைச்சராக்கியது என் தவறு; வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் இரு தரப்பும் நிர்வாகிகளை மாற்றி மாறி நீக்கி, கட்சியில் இரண்டு அமைப்புகள் உருவாகின. மாவட்டங்களில் இரு தலைவர்கள், இரு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Related Articles

Related image1
வேலையும் முடியல, தண்ணியும் வடியல..! இப்ப ஒரு உயிர் பொயிடுச்சி - திமுகவுக்கு எதிராக கொதிக்கும் ஈபிஎஸ்
Related image2
சென்னை - கடலூர், திண்டிவனம் - தி.மலை புதிய பாதை திட்டங்களை கிடப்பில் போடுவதா - அன்புமணி ஆவேசம்
35
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்
Image Credit : facebook / ramadoss

அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்

இதனையடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்க அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தார்.ராமதாசும் போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். இதனால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியது. அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் எந்த வித தடையும் பிறப்பிக்காத நிலையில் கூட்டம் நடைபெற்றது

அதில் அன்புமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் கூறி விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

45
அன்புமணிக்கு நோட்டீஸ்
Image Credit : our own

அன்புமணிக்கு நோட்டீஸ்

ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.  இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், 

முதல் முறையாக அனுப்பப்பட்ட விளக்க கடிதத்திற்கு எந்தவித பதிலும் வரவில்லை. இதனையடுத்து நிர்வாக குழு கூடி ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக பரிந்துரை செய்திருந்தது. அதையும் நிர்வாக குழு ஆராய்ந்து இன்னும் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவு எடுத்து . 10ஆம் தேதி வரை அன்புமணிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

55
அன்புமணிக்கு ஒரு வார காலம் அவகாசம்
Image Credit : Ramadoss

அன்புமணிக்கு ஒரு வார காலம் அவகாசம்

இரண்டாம் கட்ட நோட்டீஸ் விளக்கம் கொடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, போகப்போக தெரியும் என பாடல் பாடிய ராமதாஸ், இந்த பாடலை எத்தனை நாட்களுக்கு தான் நான் பாடுவது என கேள்வி எழுப்பினார். பதில் அளிக்கவில்லையென்றால் ஒருங்கிணைப்பு குழு, நிர்வாக குழுவின் கருத்துகளை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று 13 மாவட்டங்களில் விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
Recommended image2
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Recommended image3
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Related Stories
Recommended image1
வேலையும் முடியல, தண்ணியும் வடியல..! இப்ப ஒரு உயிர் பொயிடுச்சி - திமுகவுக்கு எதிராக கொதிக்கும் ஈபிஎஸ்
Recommended image2
சென்னை - கடலூர், திண்டிவனம் - தி.மலை புதிய பாதை திட்டங்களை கிடப்பில் போடுவதா - அன்புமணி ஆவேசம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved