- Home
- Tamil Nadu News
- குடையில்லாமல் வெளியே போகாதீங்க! இன்று இடி, மின்னலுடன் மழை இருக்காம்! வானிலை மையம்!
குடையில்லாமல் வெளியே போகாதீங்க! இன்று இடி, மின்னலுடன் மழை இருக்காம்! வானிலை மையம்!
வங்கக்கடல் சுழற்சியால் தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Tamilnadu Rain
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
நேற்று முன் தினம், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
chennai weather
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
high temperature
வெப்ப அளவின் வேறுபாடு
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
Tamilnadu Weather Update
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.