- Home
- Tamil Nadu News
- பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
தமிழ்நாடு மின்சார வாரியம், மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu electricity board
தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
Tamilnadu Power Cut
பொதுத்தேர்வால் தடையில்லா மின்சாரம்
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தி.மலை அண்ணாமலையார் கோவில்! 50 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்க சங்கிலியை வழங்கிய பக்தர்!
Power Cut
நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை
இதன் காரணமாக மின்தடை செய்யப்படுவதில்லை. அப்படி இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சில காரணத்தால் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற தகவலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
power shutdown
பெரம்பலூர் மாவட்டம்
வெண்மணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குன்னம், அந்தூர், கல்லம்புதூர், வரகூர், நல்லறிக்கை, மேலமாத்தூர், புதுகுடிசை, கீழமாத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.