- Home
- Tamil Nadu News
- அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 9 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heatwave in tamilnadu
சுட்டெரிக்கும் கோடை வெயில்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலை முதலே வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக மதிய வேளைகளில் கடும் வெப்ப அலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோடை வெயில் ரொம்ப உக்கிரமாக இருப்பதால் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Temperature
தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்துள்ளது. அதன்படி வேலூரில் அதிகபட்சமாக 105, ஈரோட்டில் 104, திருச்சியில் 102, சென்னை 101, நாமக்கல், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதையும் படிங்க: இடி, மின்னலுடன் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! அதுமட்டுமல்ல! வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!
Tamilnadu Rain
தமிழகத்தில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
Rain news
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இதனிடையே தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.