MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆஹா! ஏப்ரல் 23ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை! அப்படினா! சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்?

ஆஹா! ஏப்ரல் 23ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை! அப்படினா! சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்?

TN Weather Update: தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 17 2025, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
tamilnadu rain

tamilnadu rain

வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 

தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். 
அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Rain with thunder and lightning in Tamil Nadu

Rain with thunder and lightning in Tamil Nadu

இடி, மின்னலுடன் கூடிய  லேசான மழை

அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் ஏப்ரல் 19 முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

35
Heatwave

Heatwave

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 

இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை  உயரக்கூடும். அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வானிலை மையம் சொன்ன எச்சரிக்கை! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? சென்னை நிலவரம் என்ன?

45
heatwave increase in tamilnadu

heatwave increase in tamilnadu

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச  வெப்ப அளவின் வேறுபாடு:  

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை  விட   அதிகமாக இருக்கக்கூடும். ஏப்ரல் 10 முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில  இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை   2-3° செல்சியஸ் இயல்பை  விட   அதிகமாக இருக்கக்கூடும். 

55
chennai weather

chennai weather

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை  36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கனமழை
மழை செய்திகள்
கோடைக்காலம்
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு
Recommended image2
Now Playing
இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Recommended image3
Now Playing
Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved