- Home
- Tamil Nadu News
- இன்று 6 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை! அதுமட்டுமல்ல கோவை, நீலகிரியில் சம்பவம் இருக்காம்!
இன்று 6 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை! அதுமட்டுமல்ல கோவை, நீலகிரியில் சம்பவம் இருக்காம்!
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வாட்டி வதைக்கும் வாயில்
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை நகர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மறுபுறம் கத்தரி வெயில் காரணமாக அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.