MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை? 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை? 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை மே 13ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : May 13 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தென்மேற்கு பருவமழை
Image Credit : our own

தென்மேற்கு பருவமழை

அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 13ம் தேதியான இன்று தொடங்க வாய்ப்புள்ளது. எப்போதும் தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்த முறை முன்கூட்டியே தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திற்கு முழுவதுமாக மழை கிடைக்காவிட்டாலும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இன்று தமிழகத்தில் மழை
Image Credit : our own

இன்று தமிழகத்தில் மழை

இந்நிலையில் மேற்கு திசைவேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

34
நாளை 10 மாவட்டங்களில் கனமழை
Image Credit : our own

நாளை 10 மாவட்டங்களில் கனமழை

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

44
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
Heavy Rain: தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து! இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!
Recommended image2
TN Heavy Rain Alert: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை அடிச்சு ஊத்தப்போகுது? சென்னையின் நிலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved