2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எத்தனை பொது விடுமுறை? பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 23 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறையும், ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 3 நாட்கள் விடுமுறையும் உள்ளன. குறிப்பாக நவம்பர் மாதத்தில் எந்த விடுமுறையும் இல்லை.
Tamilnadu Government
விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளவில்லா சந்தோஷம் தான். இந்நிலையில் 2024ம் ஆண்டு முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் 2025ம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் பொது விடுமுறை எத்தனை நாட்கள் மற்றும் எந்ததெந்த மாதங்களில் எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதை பார்ப்போம். 2025ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ரூ.2000ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா?
Public Holidays
2025 பொது விடுமுறை நாட்கள்
ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14 பொங்கல் , ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் , ஜனவரி 16 உழவர் திருநாள், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான், ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், ஏப்ரல் 18 புனித வெள்ளி, மே 1ம் தேதி தொழிலாளர் தினம்.
Government Employee
2025 பொது விடுமுறை நாட்கள்
ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14 பொங்கல் , ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் , ஜனவரி 16 உழவர் திருநாள், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான், ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், ஏப்ரல் 18 புனித வெள்ளி, மே 1ம் தேதி தொழிலாளர் தினம்.
Pongal Festivel
2025ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால் பொதுவாக விடுமுறை என்பது 23 நாட்களாகும். ஜனவரி மாதத்தில் 14,15,16 ஆகிய நாட்கள் பொங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடக்கிறது. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை கிடக்கிறது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி! ஜனவரி 1ம் தேதி டோட்டலா மாறுது! இதோ முழு விவரம்!
Holidays
அதற்கு அடுத்த படியாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட், அக்டோபர் உள்ளிட்ட மாதங்களில் 3 நாட்கள் பொது விடுமுறை கிடக்கிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் எந்த பொது விடுமுறையும் இல்லை.
School Student
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன. வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமையில் குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை வருகிறது. வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை 3 பொது விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.