கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ இவ்வளவா.?
சமையலுக்கு முக்கிய தேவையான வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை சமீபகாலமாக கடுமையாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு, மழைப்பொழிவு குறைவு போன்ற காரணங்களால் வெங்காயம் வரத்து குறைந்து விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தக்காளி, வெங்காயம் விலை உயர்வு
சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறியாகும், அதிலும் வெங்காயம் மற்றும் தக்காளி இல்லையென்றால் பெரும்பாலான உணவு பொருட்கள் சமைக்கவே முடியாது. எனவே இல்லத்தரசிகளின் காய்கறி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும். சைவம் முதல் அசைவம் சமைப்பதற்கு முக்கிய தேவையாக உள்ளது. மேலும் புரட்டாசி மாதம் காரணமாக அசைவ உணவு தயாரிப்பது சற்று குறைந்துள்ள நிலையில்,
சைவ உணவுகள் மட்டுமே பெரும்பாலான வீடுகள் சமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.. குறிப்பாக தக்காளியின் விலை 50 ரூபாயை தாண்டியுள்ளது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
அதுவே மற்ற சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வருகிற நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வெங்காயம் மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உற்பத்தியைப் பொறுத்து, அங்குள்ள நாசிக் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்ததுள்ளது. இதன் காரணமாக இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும். விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் பருவ மழை காரணமாக பல இடங்களில் வெங்காய விளைச்சல் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் வெங்காய வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ONION
வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
இந்தநிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மினி லாரி மூலம் வெங்காய விற்பனையை செய்து வருகிறது. பரபரப்பான சந்தைகள், குடியிருப்பு பகுதிகள், முக்கிய ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் மொபைல் வேன்கள் நிறுத்தப்பட்டு, மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் மட்டும் 19 இடங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல பல்வேறு மாநிலங்களில் வெங்காய விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எனவே விரைவில் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா, ஆந்திராவில் வெங்காய அறுவடை தீவிரம் அடையும் போது, தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ 55 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ முருங்கைக்காய் என்ன விலை.?
காலிஃப்ளவர் வந்து 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 10 முதல் 20ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது