MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குஷியான அறிவிப்பு.! இதை மட்டும் செய்தால் 10 லட்சம் உறுதி- தமிழக அரசு

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குஷியான அறிவிப்பு.! இதை மட்டும் செய்தால் 10 லட்சம் உறுதி- தமிழக அரசு

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 11 2025, 07:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குஷியான அறிவிப்பு.! இதை மட்டும் செய்தால் 10 லட்சம் உறுதி

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குஷியான அறிவிப்பு.! இதை மட்டும் செய்தால் 10 லட்சம் உறுதி

கல்வி தான் மாணவர்களை நல் வழிப்படுத்தும் அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் சுகாதாரமும் உருவாகும். மேலும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் சுற்று சூழல் மாசு ஏற்படுவதோடு விலங்குகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

மேலும் பல வருட காலம் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பூமியில் வாழும். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும். இந்த நிலையில் தான் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

25
"மீண்டும் மஞ்சப்பை"

"மீண்டும் மஞ்சப்பை"

அதன் படி பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு பல லட்சத்தில் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில்,  2022-23 நிதியாண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தில் மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி,

35
பள்ளி கல்லூரிகளுக்கு பரிசு

பள்ளி கல்லூரிகளுக்கு பரிசு

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு  வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.
 

45
பிளாஸ்டிக் இல்லாத வளாகம்

பிளாஸ்டிக் இல்லாத வளாகம்

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும். வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள் / கல்லூரிகள் / வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.

55
விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.05.2025 என  சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Vijay | தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ் ! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
Recommended image2
Jothimani : அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... திமுகவில் இருந்து தவெக கூட்டணிக்கு தாவியது பற்றி ஜோதிமணி கருத்து
Recommended image3
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved