- Home
- Tamil Nadu News
- போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! பை நிறைய அள்ளும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! பை நிறைய அள்ளும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயம் கிலோ ரூ.20 முதல் 25 வரையிலும் விற்பனையாகிறது.

காய்கறிகளும் சமையலும்
சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது இயலாத காரியம். எந்த வகை கூட்டு, பொரியல், சாம்பார். ரசம் என எதுவாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் கட்டாயம் தேவை. எனவே காய்கறி சந்தையில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி வரத்தும் வந்துள்ளது.
இதன் காரணமாக விலையானது தற்போது சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தக்காளி விலை அதிகரித்திருந்தது. ஒரு கிலோ 80 ரூபாயை தாண்டியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதே போல வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 50 ரூபாயை தாண்டியது.
சமையலில் தக்காளி, வெங்காயம்
அண்டை மாநிலங்களில் அதீத கன மழையால் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதே விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு குஷியான தகவலாக பச்சை காய்கறிகள் முதல் தக்காளி மற்றும் வெங்காயம் வரை விலையானது சரிந்துள்ளது. அந்த வகையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலையானது குறைந்துள்ளது.
தக்காளி தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 20 முதல் 25 வரை விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 5 கிலோ தக்காளி விற்பனையாகிறது. இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு அதிக தேவையான இந்த இரண்டு காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் பை நிறைய பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
பச்சை காய்கறிகள் விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது பச்சை காய்கறிகள் விலை
காலிபிளவர் ஒரு கிலோ 25 க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
பூசணி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது