போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலைகள் ஏற்ற இறக்கம் கண்டு வருகின்றன. சமீபத்தில் விலைகள் குறைந்திருந்தாலும், மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. இது இல்லத்தரசிகளின் சமையலறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமையலும் காய்கறிகளும்
காய்கறிகள் இல்லாமல் சமையல் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே சைவைமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும் காய்கறிகள் முக்கிய தேவையாக இருக்கும், அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாத சமையல் சாத்தியம் இல்லாத ஒன்று. ரசம் முதல் பிரியாணி சமைப்பது வரை வெங்காயம் தக்காளி கட்டாயம் தேவை.
இந்த இரண்டும் தான் சமையலுக்கு ருசியை கொடுக்கும். எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகள் வாங்கு கிறார்களோ இல்லையோ, தக்காளி, வெங்காயம் கட்டாயம் வாங்குவார்கள். இந்த இரண்டின் விலையும் உயர்ந்தால் அவ்வளவு தான் சமையலில் சுவை இருக்கவே இருக்காது.
தக்காளி, வெங்காயம் விலை
அந்த வகையில் தான் மற்ற பச்சை காய்கறிகளைவிட இந்த தக்காளி மற்றும் வெங்காயம் மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக காய்கறி சந்தையில் குவியும். எனவே பொதுமக்களும் மற்ற காய்கறிகளை குறைவாகவும், தக்காளி வெங்காயத்தை அதிகமாகவும் வாங்கிச்செல்வார்கள்.
ஆனால் இந்த இரண்டு காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியது. இதே போல வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 130 ரூபாயை எட்டியது. இதனால் பை நிறைய கிலோ கணக்கில் வாங்கி செல்லும் மக்களு குறைவான அளவே காய்கறிகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மீண்டும் உயர்ந்த தக்காளி விலை
எனவே இந்த காய்கறிகளின் விலை எப்போது குறையும் என காத்திருந்த மக்களுக்கு இந்த ஆண்டு தொடக்கமே மகிழ்ச்சியாக இருந்தது. தக்காளி விளைச்சல் அதிகரிப்பு, வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலையானது சரிந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்ததையடுத்து விலையானது சரசரவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 25 ரூபாயில் இருந்து 40 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள்.
கோயம்பேட்டில் காய்கறி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது
பச்சை காய்கறிகள் விலை
கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது,