- Home
- Tamil Nadu News
- TOMATO PRICE : தக்காளி, வெங்காயம் விலை ஒரு கிலோ இவ்வளவு தானா.? பை நிறைய அள்ளும் மக்கள்
TOMATO PRICE : தக்காளி, வெங்காயம் விலை ஒரு கிலோ இவ்வளவு தானா.? பை நிறைய அள்ளும் மக்கள்
தமிழகத்தில் காய்கறிகளின் விலை பருவநிலை, விளைச்சல், மற்றும் சந்தை வரத்தைப் பொறுத்து அமைகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை சற்று குறைந்திருந்தாலும், மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

நாளுக்கு நாள் மாறி வரும் காய்கறிகளின் விலை
தமிழகத்தில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் மாறி வருகிறது, பருவநிலை, விளைச்சல், சந்தை வரத்து மற்றும் தேவை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காய்கறிகள் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.
சத்தான உணவுக்கு அடிப்படையாக இருக்கும் காய்கறிகளின் விலை, மக்களின் பொருளாதார நிலையைப் பாதிக்கும் வகையில் நாள் தோறும் மாறி மாறி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு சந்தைகளான சென்னை கோயம்பேடு, மதுரை, ஒட்டன்சத்திரம், திருச்சி போன்ற முக்கிய மார்க்கெட்டுகளில் காய்கறி விலைகள் தினந்தோறும் மாறுபடுகின்றன.
கோயம்பேட்டில் குவியும் காய்கறிகள்
சென்னை கோயம்பேடு மார்க்கெட் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் வரத்து அடைகின்றன. அந்த வகையில் காய்கறிகள் மூட்டை மூட்டையாக லாரி லாரியாக வந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.
அந்த இரண்டு காய்களிகள் தான் சமையலுக்கு அடிப்படை தேவையாகும். இதன் காரணமாகவே மக்கள் விலையை பொறுத்து பை நிறையவோ அல்லது கை நிறையவோ வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது. தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை சற்று குறைந்திருந்தாலும்,
உச்சத்தை தொட்ட தக்காளி, வெங்காயம் விலை
பீன்ஸ், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை உயர்ந்தே உள்ளது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. வெங்காயத்தின் விலையும் போட்டி போட்டு உயர்ந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதனையடுத்து வரத்து அதிகரித்ததால் விலையும் குறைந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும், வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலை ஏற்ற இறக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக, நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள், உயர்ந்த விலைகளால் சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் என்ன விலை
இந்த நிலையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை பொறுத்தவரை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 30 ரூபாய்க்கும்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இன்றைய காய்கறி விலை
அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய்க்கும்,
இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது