- Home
- Tamil Nadu News
- மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை!
மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகத்தை நிறுத்துகிறது. கோவை, கடலூர், மேட்டூர், திருப்பூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கடலூர்
நல்லாத்தூர், கீழ்குமாரமங்கலம், செல்லஞ்சேரி, புதுக்கடை, நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரகல்பட்டு, எஸ் புதூர், கிருஷ்ணாபுரம், சித்தராசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டம்பாக்கம், காந்திநகர், கீழ்கவரப்பட்டு,, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பகண்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்
கள்ளக்குறிச்சி
குருபீடபுரம், இவத்தக்குடி, லச்சியம், மலைக்கோட்டாலம், தியாகதுருகம், OHT, ரிஷிவந்தியம், நாகலூர், பிளாயசிறுவாங்கூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை விநியோகம் நிறுத்தப்படும்.
மேட்டூர்
அரூர்பட்டி, புளியம்பட்டி, பூசாரியூர், ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை விநியோகம் நிறுத்தப்படும்.
திருப்பூர்
நாமக்கல்
பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, கொமரபாளையம், புதன்சந்தை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை மின்தடை விநியோகம் நிறுத்தப்படும்.
திருப்பூர்
அருள்புரம், தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமாபாளையம், சேடர்பாளையம் சாலை, செட்டி தோட்டம், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின் விநியோகம் தடைப்படும்.
நங்கநல்லூர்
வித்யா நகர் 1 முதல் 3 வரை தெரு, முத்தியால் ரெட்டி நகர் 1 முதல் 3 வரை தெருக்கள், கணேஷ் நகர் பிரதான சாலை 1 மற்றும் 2, கஸ்தூரி பாய் தெரு, ராமகிருஷ்ணன் தெரு, ராதா நகர், அண்ணா நகர் பிரதான சாலை, கனகவல்லி தெரு, EPR நகர், மண்டபம் இணைப்பு சாலை, உஷா நகர் 2 மற்றும் 3 தெருக்கள், பாலாஜி நகர் பிரதான சாலை, 17,18,19,24 முதல் 37 வரை தெருக்கள் மற்றும் 3வது நீட்டிப்பு, சப்தகிரி தெரு, கிராம சாலை, காயத்ரி தெரு, கிரி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.