- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதுவும் 8 மணிநேரம்!
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதுவும் 8 மணிநேரம்!
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும். எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஆவடி
சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருமுல்லைவாயல்
ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டம்
சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை.
புதுக்கோட்டை மாவட்டம்
சண்முகா நகர், ஜேஜே கல்லூரி, சிவபுரம், தேக்காட்டூர், வல்லத்திரக்கோட்டை, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை விநியோகம் நிறுத்தப்படும்.
கோவை மாவட்டம்
மாலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி மின்தடை ஏற்படும்.
திருவாரூர் மாவட்டம்
நெய்வாசல், பனையக்கோட்டை, உம்பளச்சேரி, பாமணி, கொக்கலடி, வரம்பியம், ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், புலவர் நத்தம், நன்னிலம், கொளக்குடி, ஆலங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், முடிகொண்டான், சேந்தமகளம், தென்றல் நகர், ஈ.வி.எஸ். நகர், கோகலடி, ராமநாதன் நகர், ராமநாதன், பாளையம், மருதப்பட்டினம், ஆதியக்கமங்கலம், ஆலிவலம், ஓடச்சேரி, அந்தகுடி, முகந்தனூர், பூதனூர், எழுப்பூர், நல்லடை, முகந்தனூர், விளாகம், ஈச்சங்குடி, திருமக்கோட்டை, சோதிரியம், பரசபுரம், பழையூர்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.