- Home
- Tamil Nadu News
- மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, பல்லடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்களின் முழு விவரம்.

மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின்கம்பம் நடுவது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.
கடலூர்
அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா எண்டல், நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வாரகல்பட்டு, எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம், எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி.
கிருஷ்ணகிரி
தருமபுரி
பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகமரை, நெருப்பூர், திகிலோடு, பி.அக்ரஹாரம், நாகாதாசம்பட்டி, தாசம்பட்டி, பிக்கிலி,
கிருஷ்ணகிரி
தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி.
மேட்டூர்
தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகோல்பாளையம், ஒடசாகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துகாடு, வட்ரம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாலம்பட்டி.
பல்லடம்
சிங்கனூர், தாராபுரம் சாலை, மாதேஷ்வர் நகர், பனபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

