- Home
- Tamil Nadu News
- வீட்டு வேலையை சீக்கிரமா முடித்துவிடுங்க.!! தமிழகத்தில் நாளை இத்தனை இடங்களில் மின் தடையா.? லிஸ்ட் இதோ
வீட்டு வேலையை சீக்கிரமா முடித்துவிடுங்க.!! தமிழகத்தில் நாளை இத்தனை இடங்களில் மின் தடையா.? லிஸ்ட் இதோ
காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் மின்தேவையால், தமிழகத்தில் நாளை (6.5.2025) பல்வேறு மாவட்டங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்.

தமிழகத்தில் நாளை மின் தடை பகுதிகள்
Full-time power outage in Tamil Nadu tomorrow (May 6)! Is your area affected? கால நிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையானது தற்போது நீடித்து வருகிறது. மின்விசிறி சுற்றினாலும் அனல் காற்று மட்டுமே வீட்டிற்குள் வந்து கொண்டுள்ளது.
எனவே பெரும்பாலான வீடுகளில் குளிசாதன பெட்டி வாங்கி வருகிறார்கள். தற்போது அதிகபட்ச மின்தேவை பயன்பாடு காரணமாக மின் பழுது ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின் தடை செய்யப்பட்டு மின்பாதை சீரமைக்கும் பணியானது நடைபெறும்
விழுப்புரத்தில் மின் தடை
அந்த வகையில், நாளைய (6.5.2025) தினம் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
விழுப்புரம்
தாதம்பாளையம், சிறுவந்தாடு, உப்புமுத்தாம்பாளையம், மோட்சகுளம் மின்பாதையைச் சேர்ந்த அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், மோட்சகுளம், பக்கமேடு, எம்.ஜி.ஆர். நகர், காந்தி நகர், கள்ளிக்குளம், புத்து, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் , திருவாரூரில் மின் தடை
திண்டுக்கல் மின் தடை பகுதிகள்:
திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி,தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி,
திருவாரூர்:
பழைய தஞ்சை, தஞ்சை. செல்லூர், திருக்களம்புதூர், ஆர்ப்பாவூர், செருக்களம், பூண்டி, சந்திராஸ்1ஏகாரபுரம், அணியமங்கலம், மேலநத்தம், கருப்பைதோப்பு, பெருமாள்கோயில்நத்தம், ஆவிக்கோட்டை, வடுவூர், ராமகாந்தியார் தெரு, எடமேலை, திருமக்கோட்டை அனல்மின் நிலையம், வடகோவனூர்,
அலிவலம், கருப்பூர், சிகர். பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், பவித்திரமாணிக்கம், விஜயபுரம், கீரகலூர், வன்னியடி கோமல், பாண்டி, குன்னலூர், அந்தக்குடி, புதுபத்தூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.
காஞ்சிபுரத்தில் மின் தடை
காஞ்சிபுரம்
புலிவாய், ஆசூர், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், வயலக்காவூர், படூர், சிறுமயிலூர், பெருநகர், மானாம்பதி, ஆக்கூர், உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கள், மாகரல், ஆர்ப்பாக்கம், களக்காட்டூர், இளையனார் வேலூர்,
காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை
காவந்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், தண்டரை, ராவத்தநல்லூர், கண்டிகை, ஆலத்தூர், உக்கல், கூழமந்தல், தேத்துறை, அத்தி, இளநீர்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய பணிகளை முன் கூட்டியே திட்டமிட தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.