MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பட்டப்பகலில் என் கட்சிகாரன கொ**ல செய்றாங்கனா! சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்துல இருக்குன்னு பாருங்க! கொதிக்கும் அன்புமணி!

பட்டப்பகலில் என் கட்சிகாரன கொ**ல செய்றாங்கனா! சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்துல இருக்குன்னு பாருங்க! கொதிக்கும் அன்புமணி!

PMK Leader Vasu Murder Case: செங்கல்பட்டு மாவட்ட பாமக துணைச் செயலாளர் வாசு, இளந்தோப்பு பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 17 2025, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ம.க. ஸ்டாலின்
Image Credit : Asianet News

ம.க. ஸ்டாலின்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியை சேர்ந்த ராமதாஸின் தீவிர ஆதரவாளரும், பாமக முக்கிய நிர்வாகியான ம.க. ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பாமக பிரமுகர் வாசு
Image Credit : Asianet News

பாமக பிரமுகர் வாசு

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாசு. பாமகவில் செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். மேலும், காட்டாங்குளத்தூர் ஒன்றிய சேர்மனாக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். அரசியலை தவிர, தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிங் சேவைகளை வழங்குவது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநூர் சப்ளை செய்து வந்துள்ளார்.

Related Articles

Related image1
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க! தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
Related image2
ஷாக்கிங் நியூஸ்! பாமக பிரமுகர் படுகொ*! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
35
கொலை
Image Credit : our own

கொலை

இந்நிலையில், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே வாசு தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அங்கிருந்த கற்களை எடுத்து வாசு உள்ளிட்ட 3 பேர் மீது சரமாரியாக வீசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரும் அங்கிருந்து ஓட தொடங்கினர். ஆனால் வாசுவை மட்டும் விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.

45
அன்புமணி ராமதாஸ்
Image Credit : Facebook/anbumani

அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளரும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான ஏ.வாசு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

55
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு
Image Credit : Asianet News

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு

இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாசு அப்பகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். பட்ரவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பனியாற்றியுள்ளார். இந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏ.வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏ.வாசுவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
திமுக
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
கொலை
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க! தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ்! பாமக பிரமுகர் படுகொ*! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved