ஷாக்கிங் நியூஸ்! பாமக பிரமுகர் படுகொ*! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மேனும், பாமக துணை செயலாளருமான வாசு, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் இளம்தோப்பு பகுதியை சேர்ந்த வாசு. இவர் இரண்டு முறையாக காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மேனாக பதவி வகித்துள்ளார். பாமக துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வந்துள்ளார். மேலும் கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தண்ணீர் லாரியில் தண்ணீர் நிரப்ப வந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த வாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக அல்லது அரசியல் காரணம் கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.