- Home
- Tamil Nadu News
- தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ஒரே மேடையில் சங்கமிக்கும் கூட்டணி தலைவர்கள்.. மெகா பொதுக்கூட்டம்!
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ஒரே மேடையில் சங்கமிக்கும் கூட்டணி தலைவர்கள்.. மெகா பொதுக்கூட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதியில் கன்னியாகுமரியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக, பாமக என தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர்.
அமித்ஷாவுக்கு பிறகு வரும் பிரதமர் மோடி
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார். முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்றி விட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக தெரிவித்தார். இந்த நிலையில், அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
ஒரே மேடையில் சங்கமிக்கும் தலைவர்கள்
அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இன்று இணைந்துள்ளது. இதனால் இபிஎஸ்ஸும், அமித்ஷாவும் குஷியாகியுள்ளனர். பிரதமர் மோடி தமிழகம் வருவதற்குள் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

