MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோடை காலத்தில் ஹனிமூனா? தென்னிந்தியாவில் குளு குளுவென இருக்கும் டாப் 5 இடங்கள்!

கோடை காலத்தில் ஹனிமூனா? தென்னிந்தியாவில் குளு குளுவென இருக்கும் டாப் 5 இடங்கள்!

கோடை காலத்திலும் குளுமையான, ரொமான்டிக் பயணத்திற்கு ஏற்ற தென்னிந்திய இடங்களைப் பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. மூணார், குடகு, ஊட்டி, ஆலப்புழா, மற்றும் வயநாடு போன்ற இடங்களின் சிறப்புகள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 26 2026, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தென்னிந்தியாவில் ரொமான்டிக் ட்ரிப் இடங்கள்
Image Credit : Asianet News

தென்னிந்தியாவில் ரொமான்டிக் ட்ரிப் இடங்கள்

கடுமையான கோடை வெயிலில் ஹனிமூன் போவது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஆனால், தென்னிந்தியாவில் சில இடங்கள் கோடை வெயில் காலத்திலும் குளு குளுவென ரொமான்டிக்கா, அதே சமயம் புதிய அனுபவத்தை கொடுக்கும். பசுமையான பள்ளத்தாக்குகள், அமைதியான இடங்கள், காபி தோட்டங்கள், அழகான மலைவாசஸ்தலங்கள் இதெல்லாம் சேர்ந்து உங்கள் ஹனிமூனை மறக்க முடியாததாக மாற்றும். கூட்ட நெரிசல் இல்லாமல் அமைதியான ஒரு ரொமான்டிக் ட்ரிப் போக வேண்டும் என்று நினைத்தால் தென்னிந்தியாவில் இந்த 5 இடங்கள் பற்றி பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மூணார்
Image Credit : Asianet News

மூணார்

கேரளாவின் தேயிலை சொர்க்கம் என்று அழைக்கப்படும் மூணார் (Munnar). தேன்நிலவு ஜோடிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகப்பிடித்தமான ஒரு சுற்றுலாத் தலம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பிரதேசம், உங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும். கோடை காலத்தில் கூட குளு குளுவென இருக்கும். இங்கு மாட்டுப்பட்டி அணை, தேயிலை அருங்காட்சியகம், மேகங்கள் உங்கள் காலடியில் மிதப்பதைக் காணலாம்.இங்க இருக்கின்ற சொகுசு ரிசார்ட்டுகள் ஹனிமூன் ஜோடிகளுக்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கும்.

Related Articles

Related image1
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Related image2
பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!
36
குடகு
Image Credit : Asianet News

குடகு

"இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் குடகு (Coorg/Kodagu), காபித் தோட்டங்கள், ஆரஞ்சுப் பழங்கள் மற்றும் பசுமையான மலைகளுக்குப் பெயர் பெற்றது. நீங்கள் காபி பிரியர் என்றால், தோட்டங்களுக்கு நேராகச் சென்று ஃப்ரெஷ்ஷான காபி பொடியை வாங்கலாம். அப்பி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. குடகில் தங்குவதற்கு ஹோட்டல்களை விட "ஹோம்ஸ்டே" (Homestays) முறையைத் தேர்வு செய்வார்கள். கோடை காலத்த்தில் கூட இங்க வானிலை ரொம்ப கூலா இருப்பதால் ஹனிமூனுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ்.

46
ஊட்டி
Image Credit : Getty

ஊட்டி

மலைகளின் அரசியான ஊட்டி (Ooty), தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைப்பிரதேசமாகும். நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள ஊட்டி, குளிர்ச்சியான வானிலை மற்றும் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளுக்காக அனைவரையும் கவரும். அதுமட்டுமல்லாமல் குளுமையான காற்று வீசும். தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரியில் படகு சவாரி, ரோஜா தோட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் அணைகள் உள்ளன. ஊட்டி மலை ரயில் மிகவும் பிரபலமானது. காடுகள் மற்றும் குகைகள் வழியாகச் செல்லும் இந்தப் பயணம் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

56
ஆலப்புழா
Image Credit : Asianet News

ஆலப்புழா

கேரளாவின் "கிழக்கின் வெனிஸ்" (Venice of the East) என்று அழைக்கப்படும் ஆலப்புழா (Alappuzha/Alleppey), உப்பங்கழி (Backwaters) மற்றும் படகு இல்லங்களுக்கு (Houseboats) உலகப் புகழ்பெற்றது. ஆலப்புழாவின் மிக முக்கியமானது படகு இல்லம். படகு இல்லத்தில் கழிப்பது ஒரு சொகுசான அனுபவத்தை கொடுக்கும். படகிலேயே கேரளா பாரம்பரிய உணவு (மீன் வறுவல் போன்றவை) சமைத்து பரிமாறப்படும். இந்த இடம் புதுமண ஜோடிகள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

66
வயநாடு
Image Credit : Asianet News

வயநாடு

மலையாள மண்ணின் பசுமை மாறாத சொர்க்கம் வயநாடு (Wayanad). மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்துள்ள இந்த மாவட்டம், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பழங்காலக் குகைகளுக்குப் பெயர் பெற்றது. இயற்கையோடு சேர்ந்து கொஞ்சம் அட்வென்ச்சரும் வேண்டும் என்று நினைக்கின்ற ஜோடிகளுக்கு வயநாடுதான் பெஸ்ட். இங்கு மலையேற்றம், அருவிகளுக்கு போவது எல்லாத்தையும் என்ஜாய் செய்யலாம். இது மட்டுமல்ல பசுமையும், குளிர்ச்சியான வானிலையும் கோடை கால ஹனிமூனுக்கு இதை ஒரு சூப்பரான ஸ்பாட் ஆகும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோடைக்காலம்
வெப்ப அலை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Leema Rose: என் மீது களங்கம் விளைவிக்கப் பார்த்தார்கள்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீமா ரோஸ்!
Recommended image2
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image3
Cauvery Calling: 13 கோடி மரங்கள் நட்டு 'காவேரி கூக்குரல்' சாதனை! வறண்ட நிலத்திலும் விவசாயிகளுக்கு வருமான மழை!
Related Stories
Recommended image1
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved