- Home
- Tamil Nadu News
- விஜய் உடன் கூட்டணி..! சஸ்பென்ஸ் உடைத்த இபிஎஸ்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு.. கெத்து காட்டும் பழனிசாமி
விஜய் உடன் கூட்டணி..! சஸ்பென்ஸ் உடைத்த இபிஎஸ்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு.. கெத்து காட்டும் பழனிசாமி
Edappadi Palaniswami | தமிழக வெற்றி கழகத்துடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் மறைமுகமாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து தொண்டர்கள் ஆரவாரம்.

தமிழகம் முழுவதும் இபிஎஸ் பிரசாரம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக தனது பிரசாரத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 170க்கும் அதிகமான தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பழனிசாமி மேற்கொள்ளும் பிரசார பரபரப்புரை நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.
கிட்னி முறைகேட்டில் விசாரணை இல்லை
வழக்கம் போல ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சித்து பேசிய பழனிசாமி, “அண்மையில் கரூரில் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 41 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அவசர அவசரமாக ஆளும் கட்சி தனிநபர் ஆணையம் அமைத்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. ஆனால் கிட்னி முறைகேடு தொடர்பாக எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை
ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் அந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் ஆழமாக பேசப்படக் கூடாது என்பது விதி. ஆனால் அதனை மீறும் விதமாக ஆணையம் அமைத்த திமுக.வினரே இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. இந்த விவகாரத்திற்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று சொல்கிறார்கள். அதனால் தான் உரிய விசாரணை வேண்டும் எனக் கோரி சிபிஐ விசாரணைக் கோருகிறோம் என்று தெரிவித்தார்.
TVK உடன் Admk கூட்டணி..
தொடர்ந்து உரையாற்றிய பழனிசாமி, திமுக.வினர் கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளனர். கூட்டணி முக்கியம் தான். ஆனால் கூட்டணி மட்டுமே வெற்றியை தேடித்தரும் என்று நினைக்காதீர்கள். அதிமுக தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவாக கூட்டணியாக இருக்கும் என்று கூறிய போது அங்கு அசைக்கப்பட்ட தமிழக வெற்றி கொடியை பார்த்து “அங்க பாருங்க கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாங்க, குமாரபாளையத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி, ஆரவாரம் ஸ்டாலினின் செவியை கிழித்துக் கொண்டு செல்லப்போகிறது” என்று கூறி தவெக உடனான கூட்டணி தொடர்பாக மறைமுகமாக தெரிவித்தார்.
BREAKING - தவெக உடன் கூட்டணியை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.. #ThalapathyVijay#TVKVijay#EdappadiPalaniswamipic.twitter.com/cxSjhvgRvL
— The_Introverter (@JOHN_WICK0702) October 8, 2025