- Home
- Politics
- ரொம்ப நல்லவரு..! விஜய் மீது தப்பே சொல்ல மாட்டோம்..! கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சி..!
ரொம்ப நல்லவரு..! விஜய் மீது தப்பே சொல்ல மாட்டோம்..! கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சி..!
கரூர் கூட்ட நெரிசலில் உயிர்களை பறிகொடுத்த குடும்பத்தினர் யாரும் விஜய்யை குறை சொல்லவில்லை என்பது ஆறுதலான விஷயம். பதிலுக்கு விஜயை தேற்றி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பேசிய விஜய்
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை இத்தனை நாட்களாகியும் விஜய் சந்திக்கவில்லை. ஆறுதல் தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார் விஜய். இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.
நான் நேரில் பார்க்க வருகிறேன்..!
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாரிடம் விஜய் பேசியபோது, தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தம்பியை பறிகொடுத்த பெண் ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘உங்கள் இழப்பு தாங்க முடியாத இழப்பு. என்னை (விஜய்) தம்பியாக நினைத்து கொள்ளுங்கள். என்மீது தப்புதான். என்னை மன்னிச்சிடுங்க. வரமுடியாத சூழலில் போயிட்டேன். கோர்ட் ஆர்டர் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன்’’ என விஜய் உருக்கமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ‘‘விஜய் அழுதார். கண்ணீர் விட்டார். காப்பொருத்தம் மாதிரி எனது சூழ்நிலை இருக்கிறது. நான் நேரில் பார்க்க வருகிறேன். சில விஷயங்கள் முடிந்தவுடன் வருகிறேன் என்றார் விஜய். நானும் அவரை அழ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அவரை கெட்டவர் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. நல்ல மனுஷன்தான். அவர் கரூரில் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அங்கிருந்த நிலைமையை பார்த்து அய்யோன்னு நிற்கிறாரு. இத்தோட நின்று விட்டதால் பிரச்சினை இல்லை. அவருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டிருந்தால்..? இடததனை கோடி மக்களை பார்க்கிற அவருக்கும் சங்கடம் ஏற்பட்டிருக்கும் இல்லையா? அவரை குற்றமா எடுத்துக்க முடியாது. அவர் போனதே நல்லது. அவர் இங்கு இருந்திருந்தால் பல சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கும். நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
விஜயை தேற்றிய கரூர் மக்கள்
இந்த கேங்கும், அந்த கேங்கும் சந்தித்து இருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். இறந்த எங்கள் குழந்தைகளைப் பார்த்து கண்ணீர் விடுகிறார். எங்க செல்லத்துகளை இழந்து விட்டோம்னு கதறி கண்ணீர் விடுகிறார். நேரில் வருகிறேன். என்னால எதுவும் பேச முடியலன்னு கண்ணீர் விட்டார். எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது. அதுக்கு மேல அவரையும் புண்ணாக்கக்கூடாதுன்னு நாங்களும் விட்டு விட்டோம். பயப்படாதீங்க. நீங்க வாங்க. எதையாக இருந்தாலும் நேர்ல வந்து சந்திங்க. களத்துக்கு வாங்க. பாதிக்கப்பட்ட எங்களுக்கு அவர் பேசியது ஆறுதலா இருக்கு’’ எனத் தெரிவித்தார்.
விஜய்யை குறை சொல்லவில்லை
விஜய் பாதிக்கப்படவர்களின் குடும்பத்தினரிடம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக தனித்தனியாக வீடியோ காலில் பேசியுள்ளார். என்ன ஆறுதல் சொன்னாலும் இழந்த உயிர்களை மீட்டு கொண்டு வர முடியாது என்று கூறி பலரிடம் அழுதுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிர்களை பறிகொடுத்த குடும்பத்தினர் யாரும் விஜய்யை குறை சொல்லவில்லை என்பது ஆறுதலான விஷயம். பதிலுக்கு விஜயை தேற்றி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.