திடீரென புதிய உச்சம் தொட்ட கேரட் விலை! நீங்களே எவ்வளவுன்னு பாருங்க!
ஊட்டியில் கேரட் விலை கிலோ கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் தீபாவளிக்கு சென்றதால் கேரட் வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Ooty
ஊட்டி கேரட் விலை உச்சம் தொட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி என்றாலே தனி சந்தோஷம் கிடைக்கும். குளிர்ச்சியான காலநிலை, இயற்கை எழில் கொஞ்சும் பசுமை, மனதை கொள்ளை கொள்ளும் மலைகள், கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும் தேயிலை தொட்டங்கள், யூகலிப்டஸ் மரங்கள், பைன் காடுகல் ஆகியவை நம்மை வேறு உலகுக்கே அழைத்து செல்கின்றன.
Ooty
நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகின்றனர். தொடர் விடுமுறை, பண்டிகை காலங்கள் என்றாலே பலரின் நினைவுக்கும் வரும் இடம் என்றால் அது ஊட்டி தான். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.
Ooty
சுற்றுலாவை தவிர நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக இருப்பது அது விவசாயம் தான். நீலகிரியில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மலைக் காய்கறி சாகுபடியில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து மண்டிகளுக்கு ஊட்டியில் விளைவிக்கப்படும் கேரட் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் விலை திடீரென உயர்ந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு கேரட் விலை நேற்று முதல் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Ooty Carrot Price
தொழிலாளர்கள் பலரும் தீபாவளி பண்டிகைக்காக சென்றுவிட்டதால் மண்டிகளுக்கு கேரட் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் கேரட் வரத்து கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவே கேரட் விலை கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் இன்னும் ஓரிரு நாட்களில் கேரட் வரத்து சீரடைந்துவிடும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.