- Home
- Tamil Nadu News
- one day ஆப்பில் கோவை கல்லூரி மாணவிகளுக்கு வலை..! வீக் எண்டில் தொழிலதிபர்களுடன் லூட்டி..! பாண்டியன் சொல்லும் பகீர் பின்னணி..!
one day ஆப்பில் கோவை கல்லூரி மாணவிகளுக்கு வலை..! வீக் எண்டில் தொழிலதிபர்களுடன் லூட்டி..! பாண்டியன் சொல்லும் பகீர் பின்னணி..!
பகல் முழுவதும் கோயம்புத்தூர் சிட்டியை சுற்றி ரவுண்டு அடித்து விட்டு, இரவு பொழிதை கழிப்பதற்கு அங்கே சென்று இருக்கிறார்கள். கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு ஒரு முன்னூறு ஏக்கர் காடு. விமான நிலையத்தை ஒட்டியிருக்கிறது.

ஒன் டே ஆப்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அங்கு நடந்த சம்பத்தின் பகீர் பின்னணியை விவரித்து இருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன்.
அவர் ஒரு யூடியூப் நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘குருடர்கள் யானையைப் பார்த்ததைப் போல கோவையில் நடந்த கூட்டு பலாத்காரம் சம்பவத்தில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண் கல்லூரி மாணவர் அல்ல. அந்த பெண் கல்லூரி மாணவி. அந்த ஆண் ஒரு ஆட்டோமொபைல் தொழில் அதிபர். அதிபர் தான் ரூ.1000 ஆயிரம் கொடுத்து இருக்க முடியும். ஒன் டே ஆப் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு உண்டான ஆப் அது. 2 டேஸ் ஆப் இருக்கிறது. இரண்டு நாளைக்கு நீங்கள் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் கூட்டிப் போகலாம். இது எல்லாமே முதலாளிகளுக்கானது.
ஊட்டியில் காட்டேஜ்
கோவை என்பதே பணம் கொழிக்கும் இடம். பக்கத்தில் டாலர் சிட்டியான திருப்பூர் இருக்கிறது. அருகில் டெக்ஸ்டைல் சிட்டியான ஈரோடு இருக்கிறது. இப்படி பணத்துக்கு பஞ்சம் இல்லாத பகுதி. இங்குள்ள தொழிலதிபர்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை உல்லாசமாக பொழுதை கழிக்க நினைக்கிறார்கள். திருப்பூர் தொழிலதிபர்கள் சனிக்கிழமை இரவு காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஊட்டிக்கு சென்று விடுவார்கள். ஒரு புதிய பெண்ணை அழைத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஊட்டியில் அவர்கள் எல்லோருக்கும் காட்டேஜ் இருக்கிறது. இங்கு செல்லும் அவர்களுக்கு எல்லாம் அன்றைய பொழுது ஹாட் ஏஜ் தான். உல்லாசமாக இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மலையில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் என்ஜாய்
ஆக மொத்தம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் என்ஜாய் தான். கோவை மலையும் மலை சார்ந்த இடம். இரண்டாவது வசதி படைத்தவர்கள் வாழக்கூடிய மாவட்டம். அது பக்கத்தில் கேரளா. மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என சுற்றிலும் நிறைய இருக்கிறது. கோயம்புத்தூரில் படிப்பதற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்து படிக்கிறார்கள். பல்லாயிரம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் என்ஆர்ஐ மாணவர்கள் அதிகம். ஏழை கிறிஸ்தவனுக்கு அங்கே வேலையே இல்லை. வசதி படைத்தவர்களுக்கு தான் காருண்யா கதவு திறந்திருக்கும். இப்படித்தான் ஆட்டோ மொபைல் தொழிலதிபர் ஒரு கல்லூரி படிக்கும் பெண்ணை புக் செய்து காரில் ஏற்றுகிறார்.
உலகையே மறந்து இருந்தபோது...
பகல் முழுவதும் கோயம்புத்தூர் சிட்டியை சுற்றி ரவுண்டு அடித்து விட்டு, இரவு பொழிதை கழிப்பதற்கு அங்கே சென்று இருக்கிறார்கள். கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு ஒரு முன்னூறு ஏக்கர் காடு. விமான நிலையத்தை ஒட்டியிருக்கிறது. அந்த இடத்தை பெரிய பெரிய தொழிலதிபர்கள் ஷாப்பிங் மால், பெரிய பெரிய ஸ்டார் ஹொட்டல்கள் கட்டுவதற்காக வாங்கிப் போட்டு இருக்கிறார்கள். பகலிலே அங்கு யாரும் வர மாட்டார்கள். இரவில் தெரு விளக்குக்கூட இருக்காது. அங்கே எப்படி இந்த ஜோடி போனது? இவர்கள் உலகை மறந்து இருப்பதற்காக அங்கே சென்று இருக்கிறார்கள். அங்கே சென்று உலகையே மறந்து இருந்தபோதுதான் அந்த மூன்று சமூக விரோதிகள் வந்து அட்டூழியம் செய்து விட்டார்கள் எனத்தெரிவித்துள்ளார்.