MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்னி பஸ் டிக்கெட் ரேட் அதிகமாக‌ இருக்கா? ஒரே ஒரு கால் பண்ணுங்க போதும்.. இதோ புகார் எண்கள்!

ஆம்னி பஸ் டிக்கெட் ரேட் அதிகமாக‌ இருக்கா? ஒரே ஒரு கால் பண்ணுங்க போதும்.. இதோ புகார் எண்கள்!

ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை குறித்து புகார் அளிக்க தமிழக அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
| Updated : Jan 12 2026, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை
Image Credit : our own

ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ரயில்களிலும், அரசு பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பி விட்டதால் மக்களுக்கு ஆம்னி பேருந்துகளை விட்டால் வேறு வழியில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

24
சென்னை டூ மதுரை ரூ.4,000
Image Credit : our own

சென்னை டூ மதுரை ரூ.4,000

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,000 கட்டணம், சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.5,000க்கு மேல் கட்டணம் என விமானங்களுக்கே டப் கொடுக்கின்றனர். இந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்க தமிழக அரசு புகார் எண்களை அறிவித்துள்ளது.

களமிறங்கிய தமிழக அரசு

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
Related image2
பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த தேதியில் எத்தனை பேருந்துகள்? முழு விவரம்!
34
பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
Image Credit : our own

பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

இந்த குழு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் போன் செய்தோ அல்லது வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.

44
பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் இதோ:
Image Credit : meta ai generated

பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் இதோ:

* போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151

இணைப்போக்குவரத்து ஆணையரகங்களின் புகார் எண்கள்:

* இணைப்போக்குவரத்து ஆணையரகம் சென்னை (வடக்கு) போன் நம்பர்: 99442 53404

* இணைப்போக்குவரத்து ஆணையரகம் சென்னை (தெற்கு) ‍97905 50052

* இணைப்போக்குவரத்து ஆணையரகம் மதுரை 90953 66394

* இணைப்போக்குவரத்து ஆணையரகம் கோவை 91235 93971

துணைப் போக்குவரத்து ஆணையரகங்களின் புகார் எண்கள்:

* துணைப் போக்குவரத்து ஆணையரகம் விழுப்புரம் 96773 98825

* வேலூர் 98400 23011

* சேலம் 78456 36423

* ஈரோடு 80569 40040

* திருச்சி 90660 32343

* விருதுநகர் 90257 23800

* திருநெல்வேலி 96981 18011

* தஞ்சாவூர் 95850 20865

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
பொங்கல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
Recommended image2
Now Playing
ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
Recommended image3
விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
Related Stories
Recommended image1
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
Recommended image2
பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த தேதியில் எத்தனை பேருந்துகள்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved