மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! நவம்பர் 13-ம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான சூப்பர் அறிவிப்பு
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாத தொடக்கத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மற்றும் திருவாரூர் கந்தூரி விழாக்களையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வேலை நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
school holiday
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கொண்டாட்டம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை கிடைத்து சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் மாதமும் விடுமுறைக்கு எந்தவித குறைவும் ஏற்படவில்லை.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதுமட்டுமில்லாமல் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையும் கிடைத்தது. இந்த விடுமுறை நாட்களையொட்டி பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் உறவினர்கள் வீடு மற்றும் சுற்றுலா சென்றுள்ளனர்.
school holiday
நவம்பர் மாதம் கொண்டாட்டம்
அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையும் பள்ளி வேலை நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த கல்வியாண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் துவக்கமே மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கூறப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School holiday
திருவாரூர் உள்ளூர் விடுமுறை
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இதே போல திருவாரூர் மாவட்டத்திற்கு நவம்பர் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
school holiday cg
நவம்பர் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
இதனையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள உத்தரவில் உலகப்புகழ் பெற்ற திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்று வேலை நாளாக 7 .12. 2024 செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.