MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வட இந்தியர்கள் வாக்கு பாஜகவுக்கு தான்..! கூட்டணி வேண்டாம்..! அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த சீமான்!

வட இந்தியர்கள் வாக்கு பாஜகவுக்கு தான்..! கூட்டணி வேண்டாம்..! அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை உயர்மறை மாவட்டப் பேராயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்தும், வடஇந்தியர்களின் வாக்குகள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 05 2025, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாம் தமிழர் கட்சி
Image Credit : Seeman

நாம் தமிழர் கட்சி

அண்மையில் மதுரை உயர்மறை மாவட்டப் பேராயராக பொறுப்பேற்ற அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான்: மூன்று தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற கோரிக்கை வைக்க வேண்டும். தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் அது யாரிடம் அடமானத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது திமுக வேடம் போடுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கூட்டணி தேவை இல்லை
Image Credit : ANI

கூட்டணி தேவை இல்லை

எங்களுக்கு இருப்பது சுதந்திர பசி, என்னுடன் இருப்பவர்கள் என்னிலும் உறுதியானவர்கள் எனவே எங்களுக்கு கூட்டணி தேவை இல்லை. கூட்டணி கட்சி வைத்து எம்எல்ஏ வென்றவர்கள் இதுவரை சாதித்தது என்ன? சீட்டுக்கு தான் கட்சி என்றால் கொள்கை எதற்கு. தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் வாக்கு சேர்ப்பது குறித்து திமுகவிற்கு எந்த கவலையும் இல்லை, அவர்கள் வாக்கை எப்படி பெறவேண்டும் என்று திமுக சிந்திக்கிறது.

34
வடஇந்தியர்களிடம் நுழைவு சீட்டு கேட்பேன்
Image Credit : google

வடஇந்தியர்களிடம் நுழைவு சீட்டு கேட்பேன்

வடஇந்தியர்களுக்கு வாக்கு கொடுத்தால் அவர்கள்தான் நாளை தமிழக அரசியலை முடிவு செய்வார்கள். வடஇந்தியர்கள் வாக்கு முழுவதும் பாஜக வாக்கு தான். இது முழுவதும் திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரோடு என்று சொல்கிறார்கள். ஆனால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராது, கேரளாவில் இருந்து தண்ணீர் வராது. நான் ஆட்சிக்கு வந்தால் வடஇந்தியர்களிடம் நுழைவு சீட்டு கேட்பேன். இந்திய இன்றும் கடன் கார நாடாக இருக்கிறது, ஆனால் இந்தியா வளர்கிறது என்று கூறுகிறார்கள், அதையும் மக்கள் நம்புகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் நல்ல ஆட்சி வரும். பிசாசை விவாகரத்து செய்து பேயை திருமணம் செய்வது போல், திமுக வேண்டாம் என்று அதிமுகவிற்கும் , அதிமுக வேண்டாம் என்று திமுகவிற்குன் வாக்கு செலுத்துகிறரர்கள். யாரும் திமுக, அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவது இல்லை.

44
அதிக வரி விதிப்பது வரவேற்கத்தக்கது
Image Credit : google

அதிக வரி விதிப்பது வரவேற்கத்தக்கது

தவெக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு இது போல் நிறைய கட்சிகள் வரும் போகும், விஜயகாந்திற்கு இல்லாத எழுச்சியா, கமல்ஹாசனும் வந்தார் சென்றார். அவ்வளவு தான். திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது, இரண்டும் ஒரே கொள்கை. ஆனால் நான் அண்ணன் வழியில் செல்கிறேன். எங்கள் வழி பிரபாகரன் வழி. அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பது வரவேற்கத்தக்கது, எப்போதாவது இந்திய அரசு விழித்துக்கொள்கிறதா என்று பார்ப்போம். எங்களால் ரோடு ஷோ நடத்தமுடியாது, அடுத்தடுத்து நிறைய போராட்டங்கள் நடத்த இருக்கிறோம் என்றார். அதிமுக கூட்டணியில் இணைந்து சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் எங்களுக்கு கூட்டணி தேவை இல்லை என கூறி இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீமான்
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
திமுக
மு. க. ஸ்டாலின்
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(16.2 ov)81/3
ENGENG
328
AUS need 248 runs in 202 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(81.2 ov)285/8
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்.! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு.. எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்?
Recommended image2
AIADMK Strategy: இடைத்தேர்தல் வந்தால் யார் போட்டியிடுவார்கள்..? வெற்றிக்காக வேட்பாளரைத் தேடும் அதிமுக.?
Recommended image3
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
Related Stories
Recommended image1
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!
Recommended image2
ஒரு மனுஷனை காதல் என்னவெல்லாம் பண்ணுது பாத்தீங்களா! எலெக்ட்ரிசியன் திருடனாக மாறியது எப்படி? விசாரணையில் அம்பலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved