MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Power Cut: இனி கரண்ட் கட்டே இருக்காது! மின்னல் வேகத்தில் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!

Power Cut: இனி கரண்ட் கட்டே இருக்காது! மின்னல் வேகத்தில் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!

No Power Shortage: தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னையில் ஏற்படும் நள்ளிரவு மின்தடை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தவும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தல்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 16 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மின்தடை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் மற்றும் மின் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Image Credit : Asianet News

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Related image1
School Teachers: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஆசிரியர்கள்.! ஒரே நாளில் சொந்த ஊருக்கு பணியிடமாற்றம்! வெளியான சூப்பர் தகவல்
Related image2
Vijayabaskar: இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்.. ராஜினாமா முடிவுக்குப் பின் தவெகவா... திமுகவா..?
36
Image Credit : Asianet News

தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள் பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.

School: பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? மொத்தம் 155 நாட்கள் லீவு!

46
Image Credit : Google

இவ்வாறான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன. மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க (Fuse-Off Call) மையங்கள், 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

56
Image Credit : GEMINI AI

தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்க உறுதிப் பூண்டுள்ளது. மின் விநியோக கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் கோளாறுகளை மின்னகம் சேவை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் தெரிவித்து உடனடி சேவையைப் பெறலாம்.

10th Public Exam Answer Sheet Copy: மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! இன்று முதல் ஜூன் 23 வரைக்கும் டைம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

66
Image Credit : X

இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மின் பழுது காரணமாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்திட அறிவுறுத்தினார்கள். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் ஆணையிட்டார்கள். சென்னையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும், அக்குழுவினர் அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பழுதினைச் சரி செய்திடவும், பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்றிட வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijayabaskar: இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்.. ராஜினாமா முடிவுக்குப் பின் தவெகவா... திமுகவா..?
Recommended image2
Now Playing
"பெண்கள் பாதுகாப்பு எங்கே? சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? M.P. கனிமொழி விமர்சனம்
Recommended image3
Now Playing
எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
Related Stories
Recommended image1
School Teachers: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஆசிரியர்கள்.! ஒரே நாளில் சொந்த ஊருக்கு பணியிடமாற்றம்! வெளியான சூப்பர் தகவல்
Recommended image2
Vijayabaskar: இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்.. ராஜினாமா முடிவுக்குப் பின் தவெகவா... திமுகவா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved