Nithyananda : கைலாசா நாட்டிற்கு போறீங்களா.? அழைப்பு விடுத்த நித்யானந்தா.!! எங்கே இருக்குதுனு தெரியுமா.?
பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா தனது கைலாசா நாட்டிற்கு வருமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அந்த நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான முகவரியையும் வெளியிட்டுள்ளார்.
நித்யானந்தாவும் சர்ச்சைகளும்
பாலியல் புகார், நடிகையுடன் நெருக்கம், மோசடி புகார் என பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் நித்யானந்தா.. தனது ஆசிரமத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி தங்க வைத்தல். சீடர்களுக்கு பாலியல் தொல்லை, பிரபல தமிழ் நடிகையுடன் நெருக்கமான அந்தரங்க வீடியோ, கற்பழிப்பு புகார் என பல வழக்குகளால் சிக்கி தலைமறைவானார்.
Ranjitha
கற்பழிப்பு வழக்கில் கைது
பெங்களூர் போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கியவரை சிறையில் அடைந்தனர். பல மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தவரை கற்பழிப்பு வழக்கில் ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஜாமினில் வெளிவந்தவர் மதுரை ஆதினத்தில் குடிபுகுந்தார். தான் தான் அடுத்த ஆதினம் கூறிவந்த நிலையில் அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார்.
கைலாசா நாட்டை உருவாக்கிய நித்தி
இந்த பரபரப்பான சூழ்நிலையில் திடீரென மாயமான நித்தியானந்தா புதிதாக நாடு ஒன்றை தொடங்கியிருப்பதாகவும் அறிவித்தார். அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரும் சூட்டினார். இளம்பெண்களோடு கைலாசா நாட்டில் இருந்து நித்தியானந்தா எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனால் இளைஞர்கள் எங்கே இருக்கிறது கைலாசா.? கைலாசவிற்கு செல்ல என்ன வழிமுறைகள் என தேட தொடங்கினர்.
கைலாசா நாட்டிற்கு பாஸ்போர்ட்
இதற்கு அடுத்ததாக ’ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா’ என்ற புதிய வங்கியையும் தொடங்கிய நித்யானத்தா,கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” அவர் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். கைலாசா நாட்டிற்கு பாஸ்போர்ட், கொடி என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டவர், மற்ற நாடுகளோடு ஒப்பந்தமும் மேற்கொண்டார்.
நித்தியின் பக்தைகள்
கைலாசா எங்கே இருக்கிறது.?
இந்த நிலையில் இந்த நாடு எங்கே உள்ளது என்ற கேள்வி எழுந்த நிலையில், ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாடு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டுக்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டுள்ளார்.
Aani Amavasya: ஆனி அமாவாசை; ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பதற்காக குவிந்த பொதுமக்கள்
கைலாசவிற்கு அழைப்பு
அதன் படி, கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் தேதி அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'கைலாசா திறக்கப்பட்டுள்ளது.
வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்,' என கூறப்பட்டுள்ளது. மேலும், 'கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்' என்று இ குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.