கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடியாக அறிவித்துள்ளார். நித்தியானந்தா மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல், ஈக்வேடார் அருகே ’கைலாசா’என்ற பெயரில் ஒரு தீவை தனி நாடாக உருவாக்கி இருப்பதாக கூறுகிறார்கள். கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
புதிதாக அமைந்துள்ள கைலாசா நாட்டில் ’தங்கத்தில் கரன்சி இருக்கும். 56 நாடுகளுடன் வர்த்தகம் நடைபெறும்’என்று நித்தியானந்தா அடுத்தடுத்து சில அதிரடியான மற்றும் அசத்தலான அறிவிப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு, ’ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா’ என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது என்றும், நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” அவர் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதேவேளை, “கன்னித்தீவை தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்கே..? கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்கே..?” என்று, தெறிக்கவிட்ட திருமண பேனர்களும்  இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது. இந்நிலையில் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் நித்யானந்தா. 

இது குறித்து அவர், வெளியிட்டுள்ள வீடியோவில், "கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும்வரை உணவு தங்குமிட வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும்.

வருகை தரக்கூடிய நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

விண்ணப்பிக்கின்ற நபர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் கையிலாசாவில் தங்க அனுமதி இல்லை. மேலும், சிவனை வழிபடுகின்ற ஆன்மிக நோக்கத்தோடு மட்டுமே வருகை தரவேண்டும். ஒருநாள் நேரடி தரிசனத்திற்கும் அனுமதி" எனக் கூறியிள்ளார்.