- Home
- Tamil Nadu News
- மாநாட்டு திடலில் யாகம் வளர்த்த தவெகவினர்! அவங்க கொள்கை தலைவர் யாரு..? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
மாநாட்டு திடலில் யாகம் வளர்த்த தவெகவினர்! அவங்க கொள்கை தலைவர் யாரு..? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
மாநாட்டு திடலில் யாகம் வளர்த்த தவெகவினரை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இது தொடர்பான முழு விவரஙக்ளை பார்ப்போம்.

TVK For Performing Yagam At Madurai Conference
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி விஜய்யின் தவெக. பல நூறு கோடிகள் அள்ளிக் கொடுக்கும் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் உறுதியாக உள்ளார்.
மதுரை தவெக மாநாடு
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் தவெக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இறுதியில் தவெக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்
தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான பெரிய மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள், உணவுப்பொருட்களை விற்கும் தற்காலிக கடைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
யாகம் வளர்த்த தவெகவினர்
தவெக மாநாட்டில் எந்தவித அசம்பாவிதமும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் விஜய்யும், தவெகவினரும் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி மாநாட்டு திடலில் தவெகவினர் யாகம் வளர்த்தனர். இதில் தவெகவின் பொதுச்செயளாலர் புஸ்ஸி ஆனந்த், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொணடனர். நாளை மாநாடு நடக்கும்போது மழை வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெகவினர் யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.
தவெகவினரை கிண்டல் செய்த நெட்டிசன்கள்
அதே வேளையில் மாநாட்டு திடலில் தவெகவினர் யாகம் நடத்தியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவராக தந்தை பெரியார் உள்ளார். பெரியாரை பொறுத்தவரை மத சடங்குகளை, மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார். அவரை தலைவராக கொண்ட தவெகவினர் யாகம் நடத்தியது தான் பல்வேறு தரப்பினரின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்தது
தவெகவினர் யாகம் நடத்தி முடித்த சில மணி நேரத்தில் மாநாட்டு திடலில் நிறுவப்பட்டு வந்த 100 அடி உயர கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. அதிவேகமாக சாய்ந்த அந்த பிரம்மாண்டமான கொடிக்கம்பம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது விழுந்தது. அந்த கார் கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது.
நல்ல வேளையாக அந்த காரில் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தவெக பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான நிலையில், கொடிக்கம்பமும் சாய்ந்தது தவெகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.