அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்.! நெல்லையில் திமுக செய்த பயங்கர சம்பவம்
நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்.! நெல்லையில் திமுக செய்த பயங்கர சம்பவம்
தமிழகத்தில் திமுக- அதிமுக இடையே நேரடியாக போட்டி இருந்தாலும், அதை விட திமுக- பாஜக இடையே தான் வார்த்தை போர் உச்சக்கட்டத்தில் உள்ளது. திமுக அரசின் செயல்பாடுகளை ஒவ்வொரு முறை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது மட்டுமல்ல, போராட்டங்களையும் பாஜக நடத்தி வருகிறது.
மேலும் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தனது அதிரடிய அரசியலால் திமுகவிற்கு டப் கொடுத்து வருகிறார். இதனால் தமிழகத்தில் எதிர்கட்சி அதிமுகவா.? அல்லது பாஜகவா.? என கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
பாஜகவிற்கு ஷாக் கொடுத்த நிர்வாகிகள்
இந்த நிலையில் தான் தமிழகத்தில் பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கட்சியில் இருந்து விலகினர்.
இதனால் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று நெல்லை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
திமுகவில் இணைந்த பாஜக நெல்லை மாவட்ட நிர்வாகிகள்
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு’நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நெல்லை சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஏ.தயாசங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் ஆகியோர் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.மீனாட்சிசுந்தர், மாவட்ட விவசாய அணி தலைவர் சி.முருகன், மாவட்ட சிறுபான்மை தலைவர் என்.இசக்கார் ராஜ்பால், எம்.லெட்சுமணன்,
நெல்லையில் கூண்டோடு காலியான பாஜக
மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் எஸ்.சபரிமலை வாசன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்.மாரியப்பன், திருநெல்வேலி நகர் கிழக்கு மண்டல தலைவர் இ.இசக்கி அய்யப்பன், தச்சநல்லூர் வடக்கு மண்டல தலைவர் எம்.பிரேம்குமார், மானூர் மத்திய ஒன்றிய தலைவர் கே.ரவி, நெல்லை நகர் மண்டல முன்னாள் தலைவர் டாக்டர் சி.பொன்னம்பலவாணன், மாவட்ட விவசாய அணி ஐடி பிரிவு மாவட்ட ஓபிசி அணி செயலாளர்கள் ஏஆர்சுந்தராஜ், ஏ.அருண்செல்வம், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் பி.பாலன்,
மாவட்ட விவசாய அணி செயலாளர்கள் என்.ரூபன், எஸ்.நடராஜன், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஆர்.கார்த்திக், மாவட்ட பொருளாதார பிரிவு துணைத் தலைவர் எம்.வெங்கடேஷ், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், ஏ.ஆர்.சேதுராமன், எஸ்.துரைசண்முகவேல், சி.செல்வராஜ், பி.லட்சுமணன் உள்ளிட்ட நெல்லை மாவட்ட பாஜகவினர் கூண்டோடு திமுகவில் இணைந்துள்ளனர்.