MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் காட்டியிருக்கலாம்.. திமுக.வை வெளுக்கும் நயினார்

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் காட்டியிருக்கலாம்.. திமுக.வை வெளுக்கும் நயினார்

நெல் கொள்முதல் தாமதத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கரையை விவசாயிகள் பிரச்சனையில் அரசு காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Oct 25 2025, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தஞ்சையில் ஆய்வு செய்த நயினார்
Image Credit : Asianet News

தஞ்சையில் ஆய்வு செய்த நயினார்

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது விவசாயிகள், பல நாட்களாக நெல் பயிர்களைக் கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். நெல்மணிகள் நனைந்து முளைத்து வீணாகி உள்ளது. எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம். இது கடந்த ஜூன் மாதமே முதலமைச்சர் கவனத்திற்கு சென்றது. கொள்முதல் விஷயத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து விட்டோம் என கூறினார். ஆனால் அவர் இதுவரை எந்த முன்னேற்பாடு பணிகளும் செய்யவில்லை என்பது தற்போது உள்ள சூழலை வைத்து அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

24
டெல்டாகாரன் என கூறுவதை நிறுத்துங்கள்
Image Credit : Asianet News

டெல்டாகாரன் என கூறுவதை நிறுத்துங்கள்

செப்டம்பர் மாதமே கொள்முதல் பணி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் காலதாமதமாக தான் கொள்முதல் செய்துள்ளனர். அதிலும் சாக்குகள் தட்டுப்பாடு, போதிய லாரிகள இயக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொள்முதல் தாமதமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு நிலையங்களிலும் ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதற்கு தமிழ்நாடு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இது தவிர தனியார் கொள்முதல் நிலையங்களில் வாடகையை விவசாயிகளிடமிருந்து வசூலிக்கின்றனர்.

நெல் மூட்டைக்கு ரூ.40 வரை கமிஷன் வாங்குகிறார்கள். கொள்முதல் தாமதத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி தான் காரணம் என மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்ற சாட்டை சுமத்தியுள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி என்பது சத்தான அரிசியாகும். இந்த அரிசியால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பதால் மத்திய அரசு கொண்டுவந்த ஒரு நல்ல விஷயமாகும். ஆனால் தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தியது தமிழக அரசுதான். இதற்கு முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நானும் டெல்டாகாரன் தான் என கூறுவதை விட்டுவிட்டு விவசாயிகள் பிரச்சனையில் அக்கறை செலுத்த வேண்டும்.

Related Articles

Related image1
உங்கள் சகாவை பார்த்தாவது மனம் மாறுங்கள் ஸ்டாலின்! கேரளா பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து நயினார்
Related image2
சாதி ரீதியில் படம் எடுப்பது நல்லதல்ல..! பைசன் தெரியாது... பைசல் மட்டுமே தெரியும்- நயினார் நாகேநதிரன்
34
பழனிசாமி ஆய்வுக்கு பின் தான் அரசுக்கே தெரியவந்தது
Image Credit : Asianet News

பழனிசாமி ஆய்வுக்கு பின் தான் அரசுக்கே தெரியவந்தது

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் . மழைப்பொழிவு அளவு விவரங்களை முன்னதாகவே கணிப்பதற்கு ரூ.10 கோடி மதிப்பில் நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆனால் அவ்வாறு வாங்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் தற்போது பெய்துள்ள மழையின் அளவு விவரங்கள் முன்கூட்டியே தெரிந்திருக்கும். இதன் மூலம் நவீன கருவி வாங்கிய விஷயத்தில் மோசடி செய்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்த பிறகுதான் கொள்முதல் தாமதத்தால் நெல்மணிகள் முளைத்த விவரமே தமிழக அரசுக்கு தெரிந்துள்ளது.

44
டாஸ்மாக்கில் கவனம் செலுத்தும் அரசு
Image Credit : X/@NainarBJP

டாஸ்மாக்கில் கவனம் செலுத்தும் அரசு

தஞ்சை ரயில் நிலையத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளை பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் கூறிய பெண் சாகுபடி செய்யவில்லை என பொய்யான தகவல்களை கூறியுள்ளார். அவர் பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. தற்போதும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன.

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நாளை ஆய்வு செய்வார்கள். தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கரையை விவசாயிகள் பிரச்சனையில் அரசு காட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயினார் நாகேந்திரன்
திமுக
மு. க. ஸ்டாலின்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
உங்கள் சகாவை பார்த்தாவது மனம் மாறுங்கள் ஸ்டாலின்! கேரளா பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து நயினார்
Recommended image2
சாதி ரீதியில் படம் எடுப்பது நல்லதல்ல..! பைசன் தெரியாது... பைசல் மட்டுமே தெரியும்- நயினார் நாகேநதிரன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved