ஆம்ஸ்ட்ராங்கை இதற்காகத்தான் கொலை செய்தோம்.! வெளியான நாகேந்திரனின் அதிரவைக்கும் வாக்குமூலம்
வட சென்னையின் முக்கிய அரசியல் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில், தாதா நாகேந்திரனின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. தனது மகன் அஸ்வத்தாமனின் அரசியல் வளர்ச்சிக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை- அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது
வட சென்னையில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். திமுக- அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுக்கு வட சென்னை பகுதியில் டப் கொடுக்கும் வகையில் அரசியலில் கலக்கியவர், கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே மர்ம நபர்களால் துடிக்க, துடிக்க வெட்டி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே கொலை செய்ததாக முதலில் வாக்குமூலம் அளித்தனர். ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்டார்ங் கொலைக்கும் சம்பந்தம் இல்லையென அவரது ஆதரவாளர்கள் உறுதியாக கூறினர். இதனையடுத்து போலீசார் குற்றவாளி திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தனர். இதனால் அதிர்சி அடைந்த மற்ற குற்றவாளிகள் கொலைக்கான பின்னனியை கூற தொடங்கினர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அடுத்தடுத்து போலீசார் முக்கிய நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயிலில் இருந்து திட்டம் போட்ட பிரபல தாதா நாகேந்திரனும் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மகனும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான அஸ்வத்தாமனும் கைதானார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என்ன.? திட்டம் போட்டது யார்.? பணம் உதவி செய்த நபர்கள் என பட்டியலிட்டிருந்தனர்.
இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல தாதா நாகேந்திரனின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில், தனது மகன் அஸ்வத்தாமன் அரசியல் வளர்ச்சிக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொலைக்கு காரணம் என்ன.?
மேலும் எனது மகன் அரசியலில் வளர்வது பிடிக்கவில்லையா என சிறையில் இருந்தவாறே ஆர்ம்ஸ்ட்ராங்கை நாகேந்திரன் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயபிரகாஷை என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் அஸ்வத்தம்மன் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம் என தெரியவந்ததால் தனக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டதாகவும் நாகேந்திரன் கூறியுள்ளார். இதனையடுத்து தான் ஆர்ம்ஸ்ட்ராங் ஆதரவாளரை அழைத்து எனது மகன் அஸ்வத்தாமனுக்கு எதாவது பிரச்சனை என்றால் நான் எந்த லெவலுக்கும் போவேன் என எச்சரித்ததாகவும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செலவை நாம பார்த்துக்கொள்ளலாம்
அப்போது தான் ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டத்துடன் வழக்கறிஞர் அருள் அஸ்வத்தாமனை அனுகியதாகவும், குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது எனது மகன் அஸ்வத்தாமன் தன்னை சந்தித்து ஆம்ஸ்ட்ரால் கொலை தொடர்பாக விவரித்தாக தெரிவித்துள்ளார். இது தான் நல்ல சான்ஸ் அவுனுங்கள செய்யச் சொல்லு, ஆம்ஸ்ட்ராங் கொலை செலவை நாம பார்த்துக்கலாம் என கூறியதாகவும் நாகேந்திரன் கூறியுள்ளார். இதனையடுத்து தான் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் எனவும் நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.