ஆபாச பட நடிகையா.? என்னை பற்றி ரஜினிக்கு தெரியும்.. ஆதரவாக பேசியிருந்தால் சல்யூட் அடித்திருப்பேன்- நடிகை ரோஜா
சந்திரபாபு நாயுடு கட்சியினர் என்னை பற்றி பேசும்பொழுது ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும். அவருடன் இரண்டு படத்தில் நடித்திருந்தேன் என்னைப் பற்றி அவருக்கு தெரியும். பெண்ணை பற்றி தவறாக பேசக்கூடாது என ரஜினி சார் பேசியிருந்தால் அவருக்கு நான் சல்யூட் அடித்து இருப்பேன் என ரோஜா கூறினார்.
Andhra Minister, actress Roja
ரோஜா- சந்திரபாபு நாயுடு மோதல்
தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியில் மகளிர் அணி தலைவியாக இருந்த நடிகை ரோஜா, அந்த கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கிருந்து விலகி ஓய்எஸ் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒய் எஸ் ஆர் மறைவுக்கு பிறகு தனிக்கட்சி தொடங்கிய ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ரோஜா இணைந்தார்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தற்போது அம்மாநில சுற்றுலா துறை அமைச்சராக உள்ளார். இந்தநிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்து அமைச்சர் ரோஜா கொண்டாடினர்.
ROJA
சந்திரபாபு நாயுடு கைது- கொண்டாட்டம்
இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் அமைச்சர் ரோஜாவை விமர்சித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளதாக பேசியிருந்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமைச்சர் ரோஜா பேட்டியளித்துள்ளார். அதில், சந்திரபாபு நாயுடு கட்சியில் நான் இருக்கும் பொழுது மோசமாக நடத்தினார்கள். இதனால் நான் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன்.
போலீசாரால் கடத்தப்பட்டேன்
இதனையடுத்து ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானேன். அப்போது சட்டத்துக்கு விரோதமாக சந்திரபாபு நாயுடு என்னை சஸ்பெண்ட் செய்யவும் செய்தார். மகிளா மீட்டிங்கிற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அந்த நிகழ்வில் கலந்து கொள்ள செல்லும் பொழுது என்னை கடத்தி சென்று விட்டார்கள். விமான நிலையத்திலிருந்து வந்த என்னை வேறு ஒரு பாதைக்கு தவறாக அழைத்து சென்று விட்டனர். அப்போது எனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் இதற்கு காரணம் சந்திரபாபு நாயுடு தான். மாலை வரை காரிலேயே வைத்து சுற்றினார்கள்.
ப்ளூ ஃபிலிம் வீடியோ வெளியிட வேண்டியது தானே
ஆனால் மீட்டிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லவில்லை. இது தொடர்பாக டிஜிபி மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளேன். பல வித வேதனைகளை அனுபவித்துள்ளேன். என்னால் சந்திரபாபு நாயுடு அடிக்க முடியவில்லை, ஆனால் கடவுளாக தண்டனை கொடுத்துள்ளார்.
அதனால் நான் எனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். நான் நடித்த ப்ளூ ஃபிலிம் வீடியோ இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் வெளியிட வேண்டியதுதானே, 10 வருடமாக இதையே சொல்லி இருக்கிறார்கள். இதன் மூலமாக எனக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள். எங்கள் வீட்டில் உறவினர்கள் குடும்பம் ஆதரவாக உள்ளது.
ரஜினிக்கு ஆந்திராவில் மரியாதை
யாரைப் பற்றி யோசிக்க வேண்டாம் என தைரியம் கொடுக்கிறார்கள். மனரீதியாக தொந்தரவு கொடுத்து அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பதை திட்டமிடுகிறார்கள். என்டிஆரின் நூற்றாண்டு விழாவில் என் டி ஆர் ஐ பற்றி பேசாமல் சந்திரபாபு நல்லவர் என ரஜினி புகழ்ந்து பேசினார். மீண்டும் சந்திரபாபு முதலமைச்சர் ஆக வேண்டும் என பேசி உள்ளார். ரஜினிக்கு ஆந்திராவில் மரியாதை உள்ளது. ஒரு தப்பானவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுகிறார். ரஜினியுடன் பேச்சுக்கு மரியாதை உள்ளது அதனை அவர் புரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும்.
கதை நல்லா இருந்தா தான் ஓடும்
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக அரசியலுக்கு வருகிறேன். வருகிறேன் எனக் கூறுகிறார். ஆனால் அரசியலுக்கு வரவில்லை. சினிமா வேறு அரசியல் வேறு. எம்ஜிஆர் ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை பலர் வந்து தோல்விதான் அடைந்துள்ளனர். படம் நல்லா இருந்தாதான் ஓடும்,
கதை நல்லா இல்லை தங்களுக்கு பிடித்தவர் என்பதற்காக ஓடாது, அதேபோல் அரசியலில் மக்கள் நம்பிக்கை வைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். பொதுகூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்கு மட்டுமே சினிமாவின் புகழ் உதவும். ஆனால் தேர்தலுக்கு வந்த பிறகு மக்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை கொடுக்குறாங்க என்பதை பொறுத்து தான் அரசியல் பயணம் அமையும்.
ரஜினி சாருக்கு சல்யூட் அடித்திருப்பேன்
விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு பதில், அளித்தவர் மக்கள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ அவர்களையே வெற்றி பெற முடியும். திரைத்துறையை வேலை பார்த்ததைவிட அரசியல் மிகவும் கடினமாக உள்ளது. நிறைய வார்த்தைகள் கடினமான வார்த்தைகள் அனுபவிக்க வேண்டி உள்ளது.
சந்திரபாபு நாயுடு கட்சியினர் என்னை பற்றி பேசும்பொழுது ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும். அவருடன் இரண்டு படத்தில் நடித்திருந்தேன் என்னைப் பற்றி அவருக்கு தெரியும். பெண்ணை பற்றி தவறாக பேசக்கூடாது என ரஜினி சார் பேசியிருந்தால் அவருக்கு நான் சல்யூட் அடித்து இருப்பேன் என கூறினார்.
இதையும் படியுங்கள்