MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Roja Issue: ரோஜா ஆபாசப்பட நடிகை என விமர்சித்த விவகாரம்..! பொங்கி எழுந்த தோழிகள் ரம்யா கிருஷ்ணன் - ராதிகா!

Roja Issue: ரோஜா ஆபாசப்பட நடிகை என விமர்சித்த விவகாரம்..! பொங்கி எழுந்த தோழிகள் ரம்யா கிருஷ்ணன் - ராதிகா!

நடிகையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின், அமைச்சருமான ரோஜா பற்றி தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, மிக மோசமாக விமர்சித்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படத்திய நிலையில், தற்போது ரோஜாவுக்கு ஆதரவாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ராதிகா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 08 2023, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sensational issue

Sensational issue

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர், பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியின் குற்றச்சாட்டு, ஆந்திர மாநிலத்தின் அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து,  நடிகை ரோஜா தன்னுடைய வீட்டில் இருந்தபடி கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் "என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருள் போல் நடத்துகிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இது தொடர்பாக கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் கட்சி ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
bandaru satyanarayana about roja

bandaru satyanarayana about roja

பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சை கேட்டு அவருடைய மனைவியே அறைந்திருக்க வேண்டும். நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள். நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது நல்லவராகவும் வேறு கட்சியிலிருக்கும் போது கெட்டவராகவும் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்னை பற்றி தவறாக பேசியது என்னை ரொம்ப காயப்படுத்துகிறது என தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

36
Radhika and Ramya krishnan support roja

Radhika and Ramya krishnan support roja

மேலும் ரோஜாவை ஒரு பெண் என்றும் பாராமல், இப்படி அவதூறாக பேசியவர்கள் மீது பாரபச்சம் இன்றி, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்து வரும் நிலையில், நடிகை ராதிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடியோ மூலம் ரோஜாவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

46
Ramya krishnan emotional speech

Ramya krishnan emotional speech

இந்த சர்ச்சை குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணன் பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இப்படி வரும் விமர்சனத்தானை ஒரு தோழியாகவும், ஒரு பெண்ணாகவும் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. உலக பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், நமது நாட்டில் பெமினிசம் இப்படி தான் பிரதிபலிக்கிறதா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாட்டின் பெண்களால் இன்றும் எவ்வளவு தாங்க முடியும். நாங்கள் பாலியல் வன்கொடுமை. பெண் சிசுக்கொலை. உள்ளிட்ட பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றோம்.

Bigg Boss: மூஞ்சை உடைப்பீங்களா? மஞ்சள் கார்டை காட்டி.. விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு பயத்தை காட்டிய ஆண்டவர்!
 

56
Requesting Modi

Requesting Modi

அவரது மோசமான விமர்சனம் ரோஜாவை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தையும் குறி வைத்தது போல் இருக்கிறது. இதனை கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, பெண்களும்  - ஆண்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். எனவே பிரதமர் மோடி இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் யாராக இருந்தாலும் சரி என கூறியுள்ளார். மேலும் இப்படிப்பட்ட இந்த நாட்டில், ஒரு பெண்ணை இவ்வளவு கீழ்த்தனமாக பேசியவரை  ஒருபோதும் மன்னிக்க கூடாது என்றும், ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்".
 

66
Radhika speech:

Radhika speech:

அதேபோல் நடிகை ராதிகாவும், ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.  "இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த வீடியோவில் கூறியிருந்தாவது, "ஒரு தோழியாகவும் அரசியல்வாதியாகவும் ரோஜாவின் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். பெண்கள் அரசியலில் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். பெண்களை பாரத மாதமாக பார்க்கப்படும் நம் நாட்டில், நடிகை ரோஜா மீதான இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் வருத்தத்தை அளிக்கிறது. இதை நினைத்தாலே மிகவும் கேவலமாக இருக்கிறது. ஒரு அமைச்சரை ஆபாச படத்தில் நடித்தவர் என்றும் அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இப்படியெல்லாம் நடக்குமா? அரியவகை பிரச்சனையால் அவதிப்படும் பிக்பாஸ் ரக்ஷிதா..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved