MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • HMPV வைரஸ்.! பதற்றப்பட வேண்டாம்.! 3 நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

HMPV வைரஸ்.! பதற்றப்பட வேண்டாம்.! 3 நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சீனாவில் பரவும் HMPV வைரஸ் தமிழ்நாட்டிலும் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. HMPV வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும், சில நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 07 2025, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
HMPV virus china

HMPV virus china

மீண்டும் அச்சுறுத்தும் வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பாதிக்கப்பட்ட நிலையில் நொடிக்கு நொடி மரணம் ஏற்படுத்து அதிர்ச்சி அடையவைத்தது. இந்தியாவிலேயும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சுமார் 3 ஆண்டுகள் கொரோனா பாதிப்பில் சிக்கிய மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் மீண்டும், மீண்டும் அச்சுறுத்தும் வகையில் புதிய, புதிய வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவில்  மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் ஆனது கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
HMPV virus

HMPV virus

சீனாவில் இருந்து பரவும் வைரஸ்

இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த HMPV வைரஸால் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்  HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது பேசிய அவர், HMPV  வைரஸ் பற்றிய செய்தி வெளியானவுடன் தொடர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.  தொற்று நோய் பரவும் காலத்தில் பொதுவாக அவசர நிலை வந்தால் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அறிவுறுத்தல் வருவது வழக்கம்,
 

34
HMPV virus

HMPV virus

HMPV வைரஸ்- தனி சிகிச்சை இல்லை

அது போல HMPV வைரஸ்  தொடர்பாக இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என கூறினார். மேலும்  மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்தும் நேற்று மாலை வரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை எனவும் தெரிவித்தார். HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என கூரிய அவர்,  Hmpv வைரஸ்க்கு என்று தனி சிகிச்சைகள் எதுவும் இல்லையென தெரிவித்தார்.

 இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும் எனவும் கூறினார்.  தமிழ்நாட்டில் இதுவரை சேலத்தில் ஒருவருக்கும் ,சென்னையில் ஒருவருக்கும் HMPV வைரஸ்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  இருவரும் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.

44
Minister Ma Subramanian

Minister Ma Subramanian

முக கவசம் அணிவது நல்லது

HMPV வைரஸ் குறித்து வரும் வதந்திகள் மக்களை அச்சமடைய செய்துள்ளது, சீனாவில் இருந்து தமிழர் ஒருவர் வெளியிட்ட காணொளியில் அங்கு சகஜ நிலை நிலவுவதை உணர்த்தியுள்ளார். எனவே மக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்தார்.

வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள்,  பொதுவெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது என கூறினார்.  அடிக்கடி கை கழுவுவது தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved