MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. சிறையில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சேகர் பாபு மற்றும் செல்வப்பெருந்தகைக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 30 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இதுதொடர்பாக வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

25
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

Related Articles

Related image1
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
Related image2
ஆம்ஸ்ட்ராங் மனைவியை களம் இறக்கிய அதிமுக..! வளர்மதி, கோகுல இந்திராவுக்கும் வாய்ப்பு..
35
Image Credit : our own

இந்நிலையில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவருக்கு இந்த கட்சிக்கு திரு.வி.க. (தனி) நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

45
Image Credit : our own

அதில், இவரது மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. சிறையில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சேகர் பாபு மற்றும் செல்வப்பெருந்தகைக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது. இந்த உண்மை வெளியே வந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான் திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா கமிஷனர் அருணால் கொலை செய்யப்பட்டனர். செல்வத்தையும் சேகர் பாபுவையும் காப்பாற்றுவதற்காக திருவேங்கடத்தையும் சேசிங் ராஜாவையும் போட்டுத் தள்ளினார் அருண் IPS.

55
Image Credit : our own

சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு வழக்கை மாறாமல் 3 கோடி மக்கள் வரிப்பணத்தில் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கி வைத்திருப்பது அருண் தான். ஆட்சி மாற்றம் நடக்கட்டும். சிபிஐ விசாரணையே தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி மாநில போலீசை வைத்தே விசாரித்து மாநில போலீசே உண்மை குற்றவாளிகளை (அருண் IPS) உட்பட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கபோகிறது. அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சவுக்கு சங்கர்
எடப்பாடி பழனிசாமி
திமுக
அரசியல்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பங்காளிகள் சமாதானத்தில் பலியான தர்மம்..! கழுத்தறுத்த அதிமுக-வுக்குப் பாடம்..! டாக்டர். திருப்பதியின் திருப்பத்தூர் சபதம்..!
Recommended image2
Now Playing
Vijay Vs DMK..? விஜய் சொன்னால் சொல்லட்டும். தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும். தெறிக்கவிடும் EPS
Recommended image3
Now Playing
பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..
Related Stories
Recommended image1
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
Recommended image2
ஆம்ஸ்ட்ராங் மனைவியை களம் இறக்கிய அதிமுக..! வளர்மதி, கோகுல இந்திராவுக்கும் வாய்ப்பு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved