MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • UDF மாடலை பார்த்து கத்துக்கோங்க.. பொங்கலன்றும் திமுகவை வம்புக்கு இழுத்த மாணிக்கம் தாகூர்.. கடுப்பில் உ.பி.க்கள்!

UDF மாடலை பார்த்து கத்துக்கோங்க.. பொங்கலன்றும் திமுகவை வம்புக்கு இழுத்த மாணிக்கம் தாகூர்.. கடுப்பில் உ.பி.க்கள்!

ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பொங்கல் தினமான இன்றும் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 15 2026, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஊசலாடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி
Image Credit : Google

ஊசலாடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் இந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலையில் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் சீட்டுகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருவது தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு
Image Credit : Google

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு

அதுவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பதை தினமும் திமுகவுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறார். இதனால் திமுக உடன்பிறப்புகள் இவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் தினமான இன்றும் 'ஆட்சியில் பங்கு தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதை கூறியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

மாணிக்கம் தாகூர் இன்று போட்ட பதிவு

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தை பிறந்தால் வழி பிறக்கும்.. ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். கேரளாவின் UDF மாடல் கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையேற்கிறது. ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.

34
நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம்
Image Credit : ANI

நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம்

நட்பு +பங்கு இதுவே UDF அரசியலின் அடித்தளம். UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம். முக்கியமானது. தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு “பை-பை” சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே.

உடன்பாடும், பொறுப்பும் கொண்டது

அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது. ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல. IUML, Kerala Congress (M), RSP உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, தொழில், சமூக நலன், நீர்வளம் போன்ற முக்கிய அமைச்சகங்களை பொறுப்புடன் நிர்வகித்தன.

44
தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை
Image Credit : X/@arivalayam

தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை

இது பெயருக்கான பங்கீடு அல்ல. கூட்டணிக் கட்சிகள் மைய துறைகளை நிர்வகித்து, முடிவெடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்றன. முக்கிய கொள்கை முடிவுகள் UDF ஒருங்கிணைப்பின் மூலம், கேரளாவின் சமூக-அரசியல் பல்வகைமையை மதித்து எடுக்கப்பட்டன. தேர்தலுக்குப் பின் துரோகம் இல்லை. வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை. இதுதான் UDF மாடலின் வித்தியாசம்.

ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு

UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில். ஒன்றாகப் போராடு. ஒன்றாக ஆட்சி செய். ஒன்றாக மக்களுக்கு வழங்கு. இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.. நல்ல ஆட்சியாக மாறட்டும். ஆட்சியில் பங்கு. தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ்
திமுக
தமிழ்நாடு
அரசியல்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
Recommended image2
Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!
Recommended image3
Now Playing
மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
Related Stories
Recommended image1
சங்கி குழு பொங்கலில் பராசக்தி டீம்..! ஜனநாயகன் மட்டும் பிளாக்..! திமுகவை போட்டு பொளக்கும் மாணிக்கம் தாகூர்
Recommended image2
சில்ற ஐ.டி. விங்.. நம் எதிரிகள்..! திமுகவை கண்ணா பின்னாவென்று தாக்கிய காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved