- Home
- Tamil Nadu News
- 10-ம் வகுப்பு மாணவன் யுவன் செய்த வேலையை பார்த்தீங்களா! நேரில் பார்த்த பெற்றோர் கதறல்! நடுங்கிய மதுரை!
10-ம் வகுப்பு மாணவன் யுவன் செய்த வேலையை பார்த்தீங்களா! நேரில் பார்த்த பெற்றோர் கதறல்! நடுங்கிய மதுரை!
மதுரையில், தேசிய அளவில் பதக்கம் வென்ற 10ம் வகுப்பு மாணவன் யுவன், வீட்டில் தனியாக இருந்தபோது ஏர்கன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்னை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவன்
மதுரை சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுக்கு யுவன்(15) என்ற மகன் உள்ளார். இவர், மேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற யுவன், மதுரை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இந்நிலையில் யுவனின் பெற்றோர் நேற்று காலை கோவிலுக்கு சென்றுள்ளனர். வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஏர்கன் துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு யுவன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டில் யுவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அலறி கூச்சலிட்டு அழுது கதறியுள்ளார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து கே.புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை
மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப பிரச்னை காரணமாக மாணவன் யுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.