- Home
- Tamil Nadu News
- விடுமுறை குறித்து லட்டு மாதிரியான அறிவிப்பு வெளியானது! சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள்!
விடுமுறை குறித்து லட்டு மாதிரியான அறிவிப்பு வெளியானது! சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள்!
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Local Holiday
அரசு விடுமுறை தவிர்த்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக சித்திரை மாதம் வந்துவிட்டால் பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி உள்ளூர் விடுமுறை வரிசைக்கட்டி வரும்.
Thanjai Periya Kovil
அதன்படி உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
Thanjavur Local Holiday
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Government Employee
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 24ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.