- Home
- Tamil Nadu News
- Vegetable Price: 3 கிலோ 100 ரூபாய்.! பர்ஸ்ட் குவாலிட்டி வெங்கயம் தக்காளி விற்பனை ஜோர்.! காய்கறிகளை மூட்டை மூட்டையாய் அள்ளிச்சென்ற பொதுமக்கள்.!
Vegetable Price: 3 கிலோ 100 ரூபாய்.! பர்ஸ்ட் குவாலிட்டி வெங்கயம் தக்காளி விற்பனை ஜோர்.! காய்கறிகளை மூட்டை மூட்டையாய் அள்ளிச்சென்ற பொதுமக்கள்.!
சென்னையின் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. விலை சரிவால் அதிகாலை முதலே சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், வரத்து அதிகரிப்பால் இந்த விலை குறைவு தொடரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூட்டநெரிசல்.!
சென்னையின் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் காணப்பட்டது. குறிப்பாக பர்ஸ்ட் குவாலிட்டி வெங்காயம் மற்றும் தக்காளி தலா 3 கிலோ ரூ.100 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டதால், அதிகாலை முதலே ஏராளமான மக்கள் சந்தைக்கு திரண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். சில்லறை வியாபாரிகளும், குடும்ப தேவைக்காக வந்த பொதுமக்களும் மூட்டை மூட்டையாக காய்கறிகளை வாங்கிச் சென்ற காட்சி சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்து ரூபாய் விலையில் இத்தனை காய்கறிகளா?
விலை குறைந்த காய்கறிகளில் பரங்கிக்காய் ஒரு கிலோ ரூ.8, வாழைக்காய் ரூ.6, உருளைக்கிழங்கு ரூ.15, மாங்காய் ரூ.20, வெள்ளரிக்காய் ரூ.30, வள்ளிக்கிழங்கு ரூ.30, சேப்பங்கிழங்கு ரூ.30, சுரைக்காய் ரூ.30, வெங்காயம் ரூ.30 மற்றும் பச்சை தக்காளி 3 கிலோ ரூ.100 என்ற விலையில் விற்பனையானது. இந்த விலை நிலவரம் இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரான விலையில் மலை காய்கறிகள்!
அதேபோல் பீட்ரூட் ரூ.40, சௌசௌ ரூ.40, கத்திரிக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை, வெண்டைக்காய் ரூ.50, பாவக்காய் ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.50, அவரைக்காய் ரூ.50 மற்றும் கோஸ் ரூ.50 என்ற விலையில் கிடைத்தன. நடுத்தர விலையில் கேரட் ரூ.70, குடைமிளகாய் ரூ.70, எலுமிச்சை ரூ.80, பீன்ஸ் ரூ.100, முருங்கைக்காய் ரூ.100 மற்றும் இஞ்சி ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.
சிப்ஸ் தயாரிப்புக்கான உருளைக்கிழங்கு விற்பனை தாறுமாறு
சந்தையில் அதிக விலை கொண்ட பொருட்களில் காலிஃப்ளவர் ஒரு மூட்டை ரூ.180-க்கு விற்பனையாகியது. அதேசமயம் பேபி கார்ன் ரூ.40, சிப்ஸ் தயாரிப்புக்கான உருளைக்கிழங்கு ரூ.35 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
காய்கறிகள் விலை இனி இறங்கு முகமாக இருக்கும்.!
வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் சில்லறை சந்தைகளிலும் அதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது மழை பாதிப்பு குறைந்திருப்பதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்திருப்பதும் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கோயம்பேட்டில் குவிந்த இல்லத்தரசிகள்.!
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதை அறிந்த பொதுமக்கள் அதிகளவில் வந்து வாங்கிச் சென்றதால் இன்று சந்தை வழக்கத்தை விட மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குடும்பச் செலவைக் குறைக்க விரும்பும் பலரும் வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை ஒரே நேரத்தில் வாங்கிச் சென்றனர். தற்போதைய விலை நிலவரம் தொடர்ந்தால் இல்லத்தரசிகளின் மாதாந்திர மளிகை செலவிலும் கணிசமான அளவு குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

