- Home
- Tamil Nadu News
- பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். பொது விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழா, மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் விழா மற்றும் தியாகிகளின் நினைவு தினங்களில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கனமழை காரணமாகவும் அம்மாவட்ட ஆட்சிகளே விடுமுறை அறிவிக்கின்றனர்.
கோட்டாறு பேராலய திருவிழா
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கோட்டாறு பேராலய திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோட்டாறு பேராலய திருவிழா டிசம்பர் 3ம் தேதி நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6ம் தேதி பள்ளி வேலை நாள்
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய கல்வி நிறுவனங்கள் செயல்படும். டிசம்பர் 3ம் தேதி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

