- Home
- குற்றம்
- ஓரினச்சேர்க்கையின் போது தகராறு! கதறிய ஆசிரியர்! விடாத 17 வயது சிறுவன்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
ஓரினச்சேர்க்கையின் போது தகராறு! கதறிய ஆசிரியர்! விடாத 17 வயது சிறுவன்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே ஆசிரியர் சுதந்திரகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓரினச்சேர்க்கை செயலி மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் ஏற்பட்ட தகராறில், சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது.

தனியார் பள்ளி ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சுதந்திரகுமார் (43). திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்காக 5 மாதமாக விடுமுறை எடுத்து படித்து கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு சி.ஆர்.காலனியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
ஓட ஓட விரட்டி படுகொலை
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆலங்குளம்- பழங்கோட்டை சாலையில் சுதந்திரகுமாரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுதந்திரகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் யார் என்பதும், சுதந்திரகுமார் செல்போனில் யாரிடம் கடைசியாக பேசியுள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அஜித்குமார் உள்பட இருவரிடமும் பேசியது தெரியவந்தது.
ஓரினச்சேர்க்கையால் கொலை
பின்னர் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது அஜித்குமார் (28), 17 வயது சிறுவனுக்கும் இடையே ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை சுதந்திரகுமார், கரடிகுளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் இருவரையும் வருமாறு கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கொலை முடிந்துள்ளது. அஜித்குமார் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

