MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடடே இப்படி ஒரு தொலைநோக்கு பார்வையா! திமுக.வின் மாநில கல்வி கொள்கையை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்

அடடே இப்படி ஒரு தொலைநோக்கு பார்வையா! திமுக.வின் மாநில கல்வி கொள்கையை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையானது தொலைநோக்கு பார்வையுடன் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு MP கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Aug 09 2025, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மாநில கல்விக்கொள்கை
Image Credit : X/@ikamalhaasan

மாநில கல்விக்கொள்கை

தமிழக அரசு சார்பில் தயார் செய்யப்பட்ட மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை வெளியிட்டார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

23
இருமொழிக்கொள்கையே தொடரும்
Image Credit : Google

இருமொழிக்கொள்கையே தொடரும்

பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை.

Related Articles

Related image1
இதுதான் கடைசி படம்; இனி என் ரூட்டே வேற... கஜானாவை நிரப்ப கமல் போட்ட மாஸ்டர் பிளான்!
Related image2
சனாதன சங்கிலியை நொறுக்கும் ஒரே ஆயுதம்! சூர்யாவின் அகரம் விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய கமல்ஹாசன்
33
அனைவருக்கும் தரமான கல்வி
Image Credit : ANI

அனைவருக்கும் தரமான கல்வி

‘அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
மு. க. ஸ்டாலின்
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஸ்டாலினுக்கு 13 மார்க். பெற்றோரும், தாய்மார்களும் மன்னிக்கக்கூடாது…! அன்புமணி ஆவேசம்
Recommended image2
Now Playing
ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
Recommended image3
அரசியல் முடிவில் பின்வாங்கியது ஏன்..? ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் கடும் கோபத்தில் ரஜினி பரபரப்பு அறிக்கை..
Related Stories
Recommended image1
இதுதான் கடைசி படம்; இனி என் ரூட்டே வேற... கஜானாவை நிரப்ப கமல் போட்ட மாஸ்டர் பிளான்!
Recommended image2
சனாதன சங்கிலியை நொறுக்கும் ஒரே ஆயுதம்! சூர்யாவின் அகரம் விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய கமல்ஹாசன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved