சிபிஐ வந்துடுச்சு, இனிமே நீதி வெல்லும்! விஜய் போட்ட 'Fire' போஸ்ட்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் "நீதி வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கும் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், 'தமிழக வெற்றிக் கழகம்' (த.வெ.க.) தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் "நீதி வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
கரூர் வழக்கில் நீதி வெல்லும்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “நீதி வெல்லும்” என ஒரு வரியில் பதிவிட்டுள்ளார். இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக அவரது இந்த பதிவு அமைந்துள்ளது.
குடும்பங்களைத் தத்தெடுக்க முடிவு
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுத்து, அவர்களின் வாழ்நாள் முழுவதும் தேவையான உதவிகளைச் செய்ய தான் விரும்புவதாக விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.