Vijay : விஜய்யின் முதல் மாநாடே இப்படியா? எதிர்பாராத திருப்பம்? நடத்தது என்ன?
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, தேதி மற்றும் இட தேர்வில் இருந்து பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறது. போலீசாரின் நிபந்தனைகள் மற்றும் ஏற்பாடுகள் காரணமாக மாநாடு தேதி தள்ளி போகும் சூழல் உருவாகியுள்ளது.
Political Leader Vijay
அரசியல் களத்தில் விஜய்
தமிழகம் மட்டுமின்றி தென் இந்தியாவிலையே திரைத்துறையில் வசூலில் கலக்கி வருபவர் நடிகர் விஜய், ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் மேல் சம்பளமாக வாங்கி வரும் விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார். திமுக- அதிமுக கட்சிகளுக்கு போட்டியாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தவர் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
இதனையடுத்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வரும் விஜய், அடுத்தாக கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்தநிலையில் கட்சி பெயர் அறிமுகம் செய்ததில் தொடங்கி கட்சி கொடி வெளியிட்டது வரை தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகம் என ஆரம்பத்தில் பெயர் வைக்கப்பட்டது. இதனையடுத்து க் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் என மாற்றி அமைக்கப்பட்டது.
21 கேள்விகளை கேட்ட போலீஸ்
கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பதற்கு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய்யின் அரசியல் மாநாடு நடத்த தமிழகம் முழுவதும் இடம் தேர்வு நடைபெற்றது. இறுதியாக விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு காவல்நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.
இதனையடுத்து போலீசாரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். ஒரு சில நாட்களுக்கு பிறகு 21 கேள்விகள் கேட்கப்பட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கினர். அதில் மாநாடு நடைபெறும் நேரம், மாநாடு நிகழ்சி நிரல், மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை, வாகனத்தின் எண்ணிக்கை, உணவு மற்றும் தண்ணீர் தொடர்பான ஏற்பாடுகள். பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வசதி, உள்ளிட்டவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
33 நிபந்தனைகள் விதிப்பு
இதனையடுத்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வழக்கறிஞர்களோடு சட்ட ஆலோசனை நடத்தினர். 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 21 கேள்விகளுக்கான பதிலை ஏற்றுக்கொண்ட போலீசார் நிபந்தனைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி 33 நிபந்தனைகளை விதித்திருந்தனர்.
மாநாட்டின் மேடை, மாநாட்டில் தொண்டர்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றின் வரைபடங்களை சமர்பிக்க வேண்டும். மாநாட்டில் ஒரு லட்டத்து 50ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு அனுமதி கேட்கப்பட்டது தற்போது 50ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன.? போலீசார் சார்பில் 50ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
vijay
நிபந்தனைகள் என்ன.?
மேலும் மாநாடு 2 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் 1.30 மணிக்கே மாநாட்டு பந்தலுக்குள் தொண்டர்களை வந்துவிட வேண்டும். குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாநாட்டு மேடை, மாநாட்டிற்கு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை வாகன நிறுத்துவதற்கு வசதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாநாடு தொடர்பாக பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த பணிகளும் தொடங்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டது. இதன் படி தவெக தலைவர் விஜய் புதிய தேதி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேதியை பொறுத்தவரை அக்டேபர் மாதம் மத்தியில் நடத்தலாம் என திட்டமிடப்பட்டிருக்கதாக தெரிகிறது.
TVK Vijay
மாநாடு தேதி மாற்றம் .? காரணம் என்ன.?
ஆனால் அக்டோபர் மாதத்தில் மழை பெய்தால் மாநாடு நடத்த முடியாத நிலை உருவாகும் எனவே இதனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதத்திற்கு மாநாட்டை தள்ளி வைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் போலீசார் அனுமதி கடந்த 3 தினங்களுக்கு முன்பு தான் கொடுத்துள்ளனர். வெறும் 15 நாட்களில் மாநாடு மேடை மற்றும் ஏற்பாடுகள் செய்ய முடியாது என்ற காரணத்தால் வேறொரு தேதிக்கு மாநாட்டை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மாநாட்டிற்கான தேதியை இன்றோ அல்லது நாளையோ விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.