- Home
- Tamil Nadu News
- பொங்கல் பரிசாக 5000 ரூபாய்.? அள்ளிக்கொடுக்கப்போகுது தமிழக அரசு.!! வெளியான அசத்தல் தகவல்
பொங்கல் பரிசாக 5000 ரூபாய்.? அள்ளிக்கொடுக்கப்போகுது தமிழக அரசு.!! வெளியான அசத்தல் தகவல்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.5000 ரொக்கப் பரிசு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகள்
தமிழக மக்கள் எதிர்பாராத சூப்பரான அறிவிப்பு தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கப்பணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் வேட்டி சேலையும் கூடுதலாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ரொக்கப்பணம் 2500 ரூபாயோடு வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசை அள்ளிக்கொடுத்த அரசு
அடுத்தாக 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை, பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு, மஞ்சள் பை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் எந்த வித பண பரிசும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக அரசு வழங்கிய பரிசு பொருட்கள் தரமானதாக இல்லையென புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்போடு சேர்ந்து 1000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை- ரொக்கப்பணம் இல்லை
கடந்த 2024ஆம் ஆண்டும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தோடு, பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டான 2025ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக தமிழக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை முழு கரும்புமட்டுமே வழங்கப்பட்டது. 1000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.
இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்களை கவரும் வகையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக 5ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5000 ரூபாயை பொங்கல் பரிசாக அள்ளிக்கொடுக்கும் அரசு.?
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதற்காக சுமார் 10ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என அரசு கணக்கிட்டுள்ளது. இதற்கான பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அந்த வகையில் மத்திய அரசு தீபாவளி பரிசாக பல்வேறு வரி சலுகையும், ஜிஎஸ்டி குறைப்பும் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு போட்டியாக தீபாவளி தினத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே நேரம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.